ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நாளை விளையாட உள்ளது. இந்த தொடர் முதல் இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செயல்பட உள்ளார். சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் 5 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்காக விளையாட உள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சுப்மன் கில் பேட்டி
இதனையொட்டி இந்திய அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில் பேசும் போது, சிறு வயதாக இருக்கும் போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை பார்த்து வளர்ந்தவன். அவர்களின் ஆட்டம், வெற்றிக்கான பசி ஆகியவற்றால் ஊக்கம் பெற்ற லட்சக்கணக்கானோரில் நானும் ஒருவன். அவர்களை போன்ற ஜாம்பவான்களை வழிநடத்துவது எனக்கு கிடைத்த மரியாதை.
அவர்களிடம் இருந்து இன்னும் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். எனக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையில் மோதல் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.. எங்களுக்கு இடையிலான உறவு அப்படியே தான் செல்கிறது. எனக்கு கிரிக்கெட் தொடர்பாக என்ன மாதிரியான உதவி என்றாலும், உடனடியாக செய்து கொடுக்கிறார்.
தோனி லெகசி
களத்திலும் முடிவு எடுக்க முடியாமல் திணறினால், நிச்சயம் சீனியர்களின் உதவியை நாடுவதில் தயக்கம் காட்ட மாட்டேன். அவர்களும் எனக்கு ஆலோசனை வழங்குவதில் எந்த நேரத்தில் தயாராகவே இருக்கிறார்கள். ரோகித் சர்மாவின் இடத்தை நிரப்புவது எளிதல்ல.. தோனி பாய் தொடங்கி வைத்த லெகசி, விராட் கோலி மூலம் ரோகித் சர்மாவிடம் வந்து, இப்போது என்னிடம் நிற்கிறது.
அதனை அடுத்த உயரத்திற்கு கொண்டு சொல்லும் வேலையை நான் செய்ய வேண்டும். ஏற்கனவே இந்திய அணியின் எதிர்காலம் தொடர்பாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுடன் பேசி இருக்கிறது. அதில் இருந்து எந்தப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

