நல்லவேளை.. ருத்ராஜ் அதை மட்டும் பண்ணலன்ன மேக்ஸ்வெல் 100 அடிச்சுருக்க மாட்டார்.. ஆஸி கேப்டன் வேட் வித்தியாசமான பேச்சு.!

. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் இளம் இந்திய வீரர்களை கொண்ட அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது போட்டியில் இன்று நடைபெற்றது .

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ருத்ராஜ் சிறப்பான சதத்தால் 20 ஓவர்களில் 222 ரன்கள் எடுத்தது. மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 123 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் கிளன் மேக்ஸ்வெல் மிகச் சிறப்பாக விளையாடி டி20 சர்வதேச போட்டிகளில் தனது நான்காவது சதத்தை நிறைவு செய்தார். 48 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் உதவியுடன் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்த அவர் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற காரணமாக அமைந்தார்.

- Advertisement -

மேக்ஸ்வெல் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் வேட் இருவரும் இணைந்து 6-வது விக்கெட்டிற்கு 39 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். தனது பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பதினாறு பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவர்கள் இருவரது சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய இன்று முதல் வெற்றியை பதிவு செய்தது.

போட்டிக்கு பின் பேசிய வேட்” இதை விட சிறப்பான ஒரு போட்டி உங்களுக்கு அமையாது. முதல் பத்துபவர்களின் முடிவில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இந்த வெற்றிக்கு எங்களின் கடுமையான உழைப்பு இருக்கிறது. எங்கள் அணியின் பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் காயம் அடைந்து வெளியேறியதால் இருபதாவது ஓவரையும் மேக்ஸ்வெல் வீச வேண்டிய சூழல் ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” மேக்ஸ்வெல் மிகச் சிறப்பாக விளையாடி தனது 100-வது சர்வதேச டி20 போட்டியில் சதம் எடுத்தது ஒரு சிறப்பான அனுபவம். 19 ஓவர்களில் இந்தியா 190 ரன்கள் தான் எடுத்திருந்தது. அதுவரை போட்டி இயங்கலின் கைவசமே இருந்தது. மேக்ஸ்வெல் வீசிய இருபதாவது ஓவரில் 30 ரன்கள் விட்டுக் கொடுத்தது இந்திய அணி 220 ரன்கள் குவிக்க காரணமாக அமைந்தது. வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சன் காயம் அடைந்ததால் மேக்ஸ்வெல் பந்து வீச வேண்டிய சூழல் ஏற்பட்டது”என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர் ” ருத்ராஜ் மேக்ஸ்வெல் இறுதி ஓவரில் 30 ரன்கள் அடிக்கவில்லை என்றால் நேச்சுரல் இந்த போட்டியில் 100 அடித்திருக்க முடியாது. எனவே எல்லா விஷயங்களும் சிறப்பாகவே நடந்திருக்கிறது. அணி வீரர்கள் அனைவரும் நல்ல மனநிலையில் உள்ளனர். அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் ஐந்தாவது டி20 போட்டியை இறுதிப் போட்டி போல ஆட வேண்டும் என்று நினைத்திருக்கிறோம்” என தெரிவித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles