அவர் என்ன சாதாரண நெட் பவுலரா.? ஈஸியா சமாளிக்க.. அவர் பும்ரா.. பாகிஸ்தான் வீரர்களின் பேட்டிங் குறித்து கிறிஸ் கெயில்.. IND VS PAK

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 176 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி எதிர்கொண்டு விளையாடி 61 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் பாகிஸ்தான் அணி விளையாட ஆரம்பித்த போது தொடக்க வீரரான சைம் அயூப் பும்ராவின் முதல் பந்தையே அடித்து ஆட முயற்சித்தார்.

- Advertisement -

ஆனால் முதல் பந்து எட்ஜ் ஆகி சிக்சருக்கு சென்றது. இருப்பினும் அடுத்த பந்தை யார்க்கராக வீசிய பும்ராவின் பந்தை எதிர்கொள்ள முடியாமல் எபிடபிள்யூ ஆகி வெளியேறினார். அதேபோல கேப்டன் சல்மான் ஆகாவும் 4 ரன்னில் விளையாடிக் கொண்டிருந்த போது பும்ராவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இதனால் பாகிஸ்தான் அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் கிரிஸ் கெயில் கூறும்போது “பும்ராவை தாக்கி விளையாட நினைக்கிறீர்களா? சாம் அயூப் அவரை அட்டாக் செய்ய நினைத்தார். முதல் பந்து எட்ஜ் ஆகி சிக்ஸ் சென்றது. ஆனால் அவர் அடுத்த பந்திலேயே வெளியேறினார். அதேபோல சல்மான் ஆகாவும் முதல் பந்தை பவுண்டரி அடித்து அதற்கு பின்னர் வெளியேறினார். நெருக்கடியான சூழ்நிலைகளில் பும்ராவை தங்களால் சமாளிக்க முடியும் என்று இவர்கள் நிஜமாகவே நம்புகிறார்களா? அவர் பும்ரா, சாதாரண நெட் பவுலர் கிடையாது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles