தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹெர்சல் கிப்ஸ், தற்போதைய தென்னாப்பிரிக்க அதிரடி கிரிக்கெட் வீரரான டெவால்டு பிரெவிஸ்க்கு பொறுப்புணர்ச்சி கிடையாது என்று தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
தென்னாபிரிக்காவில் தற்போது நடைபெற்ற வரும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி விளையாடின. இதில் 189 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பிரிட்டோரியா அணிக்கு நான்காவது இடத்தில் களமிறங்கிய டெவால்ட் பிரவிஸ் ஐந்து பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து விட்டு அதற்குப் பிறகு அதிரடியாக ஆட முயற்சித்து ஆட்டம் இழந்தார்.
இதில் கடுப்படைந்த கிப்ஸ் “இந்த பிரவிஸ் பையனுக்கு அணிதரப்பிலிருந்து என்ன அறிவுரை கூறுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. மேலும் என்ன கூறுகிறார்கள் என்பதை கவனிக்க நான் ஆர்வமாக உள்ளேன். அவர் நிறைய டி20 போட்டிகளில் விளையாடியிருந்தாலும் ஒரு இன்னிங்சை எப்படி கட்டமைப்பது என்பதில் தடுமாறுகிறார். அவரிடமிருந்து அதிக பொறுப்பை வரவேண்டும் ஆனால் அவர் அதை எடுத்துக் கொண்டு செயல்படுவதாக எனக்கு தெரியவில்லை” என்று பேசி இருக்கிறார்.

