தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி டி20ஐ தொடரை 1-1 என சமனில் நிறைவு செய்து நேற்று ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கியது. சீனியர் வீரர்கள் இல்லாத பட்சத்திலும் நிலையில் கே.எல்.ராகுல் தலைமையிலான இளம் இந்திய அணி தென்னாபிரிக்காவை அவர்களது சொந்த இடத்தில் பந்தாடியது.
இந்த வெற்றிக்கு மிக முக்கிய அங்கமாக விளங்கியவர் அரஷ்தீப் சிங். முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணியின் டாப் ஆர்டரை வந்த வேகத்தில் பெவிலியன் திருப்பி ஆட்டத்தை இந்திய அணிப் பக்கம் இழுத்தார். 10 ஓவரில் 37 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி தென்னாபிரிக்காவுக்கு எதிராக 5 விக்கெட் ஹாநேற்று ல் எடுத்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அரஷ்தீப் சிங்குடன் ஆவேஷ் கான் இணைந்து அவரது பங்குக்கு 4 முக்கிய விக்கெட்டுகள் எடுக்க 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாபிரிக்கா. பிறகு சாய் சுதர்சன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரின் அரை சதம் இந்தியாவை இலக்கை அடையச் செய்தது. பொட்டிக்குப் பிறகு ஆட்ட நாயகனான அரஷ்தீப் சிங்கை பாராட்டித் தள்ளினார் முன்னாள் தென்னாபிரிக்கா லெஜென்ட் ஷான் பொல்லாக்.
அவர் கூறியதாவது, “ அரஷ்தீப் சிங்கை மிகவும் சிறப்பாக செயல்பட்டார். நான் இத்தனை ஆண்டுகள் அவரைப் பார்த்ததில் இரண்டு விஷயங்களை நன்கு கவனித்தேன். துவக்கத்தில் புதிய பந்தை வைத்து சிறப்பாக ஸ்விங் செய்கிறார். பிறகு கடைசியாக டெத் ஓவர்களில் துல்லியமான யார்க்கர்கள் வைத்துள்ளார். இதனுடன் சில மெதுவான பந்துகளை கலந்து வீசுகிறார். ”
“ நேற்று பிட்ச் மிகவும் வறட்சியாகக் காணப்பட்டது. அதனால் பந்து நன்று க்ரிப்பாகி வந்தது என்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை அரஷ்தீப் சிங் பந்தை நிலையான வடிவத்தில் வைத்து ஸ்விங் செய்ததே அவருக்கு விக்கெட்டுகளை வாரித் தந்தது. முதல் விக்கட்டுக்குப் பின் வான்டர் டசனுக்கு எந்த வெரியேட்ஷன் தேவையோ அதனை அவரின் விக்கெட்டை தூக்கினார். ”
“ தைரியமான மன அணுகுமுறை கொண்ட அவர் கிடைக்கும் வாய்ப்பில் துல்லியமாக வீசி விக்கெட்டுகளை எடுத்தார். மேலும் முதல் 25 ஓவர்களில் 10 ஓவர்கள் வீசியது மிகவும் பிரமாதம். இதெல்லாம் தான் அவருக்கு வர வேண்டிய பரிசைக் கொடுத்துள்ளது. நேற்று அவரின் சிறப்பான பந்துவீசியதில் மிகவும் மகிழ்ச்சி. ” என பாராட்டு மழையை பொழிந்தார் ஷான் பொல்லாக்.

