டி20 WC.. 8 பேர்ல 4 பேர் இதை நிச்சயமா செய்யணும்.. இல்லனா பெரிய டீம் கிட்ட இந்தியா செம்மையா அடி வாங்கும்.. திட்டத்தை மாற்றுவாரா கம்பீர்?. முழு விபரம்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் விளையாடிய ஆட்டம் இழக்க சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடிய ஆட்டத்தை இந்திய அணிக்கு சாதகமாக மாற்றினார். அப்போதே இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை குறித்து சில பிரச்சினைகள் இருந்தது.

- Advertisement -

முதல் 4 விக்கெட்டுகள் விரைவாக ஆட்டம் இழந்தாலும் ஹர்திக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு விளையாடியிருக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பேசியிருந்தார். மேலும் இந்திய அணி இதே மாதிரியான அணுகுமுறையை பெரிய அணிகளிடம் செயல்படுத்தினால் நிச்சயம் தோல்விதான் என்று வெளிப்படையாக கவாஸ்கர் பேசி இருந்தார்.

- Advertisement -

இந்திய அணியை கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே மாதிரியான அணுகுமுறையில் விளையாடி வந்தாலும் ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிற்கும் சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்திய அணியின் கோச் கெளதம் கம்பீர் இதனை கருத்தில் கொண்டு முதல் நான்கு விக்கெட்டுகள் அதிரடியாக விளையாடினாலும் அடுத்த நான்கு விக்கெட்டுகள் ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து பொறுப்புடன் விளையாட வேண்டும் என்று முடிவுக்கு வந்தாக வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே இதனை கம்பீர் அடுத்தடுத்த போட்டிகளில் செயல்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles