பாண்டியா ஒருத்தர்னால.. இந்தியா பேட்டிங், பௌலிங் ரெண்டுமே வீக்கா இருக்கு.. கூறுகிறார் தமிழக முன்னாள் வீரர்

இந்தியா உள்ளிட்ட அனைத்து சர்வதேச நாடுகளும் டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்காக தயாராகி வருகின்றன. இந்தியா அதே வேளையில் தனது முதல் பயிற்சி போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் தேர்வால் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழக முன்னாள் வீரர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் மேலாளர் சுனில் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சில வாரங்களுக்கு முன்பாக டி20 உலக கோப்பையில் விளையாட போகும் அணியை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்திருந்தது. அப்போதே தமிழக வீரர் நடராஜனையும், ரிங்கு சிங்கையும் எடுக்காதது சர்ச்சையானது. ரிங்கு சிங் ரிசர்வ் வீரர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டாலும், நடராஜன் அந்த பட்டியலில் கூட சேர்க்கவில்லை.

- Advertisement -

மேலும் இந்திய அணி எதற்காக நான்கு ஸ்பின்னர்களுடன் செல்கிறது. ரிங்கு சிங் ஐபிஎல்லில் சரியாக விளையாடாத ஒரே காரணத்தால் அவரை எடுக்கவில்லை எனவும், ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக இருந்த போதிலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே சொதப்பினாலும் அவரை இந்திய அணி எடுத்து துணை கேப்டன் ஆக்கியிருக்கிறது.

இதனால் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே சமநிலையில் இருந்து தவறி இருப்பதாக தமிழக முன்னாள் வீரர் சுனில் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார் இது குறித்த அவர் விரிவாக கூறும்பொழுது
” இந்தியா ஒரு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரரை மட்டும் தேர்வு செய்திருக்கலாம். ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக கலீல் அகமது தேர்வு செய்யப்பட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

- Advertisement -

ஏனென்றால் நியூயார்க் நகரத்தில் இரண்டு மணிக்கட்டு ஸ்பின்னர்கள் ஒரே நேரத்தில் விளையாட வாய்ப்பு இல்லை. அங்குள்ள மைதானம் நேராக 55 மீட்டர் தூரம் மட்டுமே கொண்டிருக்கும். தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பிட்ச்சில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஜடேஜாவை ஒரு ஸ்பின்னர் ஆக பயன்படுத்தலாம். யார்க்கர் பந்துகளை வீசும் பந்துவீச்சாளர்களை இந்திய அணி தேர்வு செய்திருக்க வேண்டும்.

பாண்டியாவால் நான்கு ஓவர்கள் முழுமையாக வீச முடியாமல் போக மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் அடி வாங்கினால் மட்டுமே இந்திய அணி சகால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்ந்தார் போல விளையாடும் நிலை ஏற்படலாம். ஆனால் இதனை வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் கோலி ஆகியோரை ஓபனிங்கில் களம் இறக்கினால் மட்டுமே இதனை செய்ய முடியும். ஆனால் அதனை அவர்கள் செய்ய மாட்டார்கள்” என்று சுனில் சுப்பிரமணியன் கூறி இருக்கிறார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles