தெ.ஆ இந்திய அணியை கிரவுண்ட்ல அடிச்சு இழுத்துட்டு போனாங்க.. வேற மாதிரி அவமானம் பண்ணிட்டாங்க – சக்லைன் முஸ்டாக் கருத்து

நேற்று இந்தியா அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மோசமாக தோல்வி அடைந்தது பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் முன்னாள் லெஜன்ட் சுழல் பந்துவீச்சாளர் சக்லைன் முஸ்டாக் இந்திய அணியின் தோல்வி குறித்து மிகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை தாண்டி சரணடைந்து தோல்வி அடைந்தது வருத்தத்துக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது. நேற்று மூன்று துறைகளிலும் தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது கவலை தருகிறது.

- Advertisement -

இது குறித்து சக்லைன் முஸ்டாக் பேசும்பொழுது ” தென் ஆப்பிரிக்கா அணி நேற்று எல்லா திட்டங்களையும் மிகச் சிறப்பாக செயல்படுத்தி விட்டது. அவர்கள் இந்திய அணியை மைதானத்தில் அடித்து இழுத்துச் சென்றார்கள். உண்மையை சொல்வது என்றால் பெரிய அவமானப்படுத்தி விட்டார்கள். இந்திய அணி பெற்று இருந்த உயர்வை இரண்டு மூன்று படி கீழே இறக்கி விட்டார்கள்”

- Advertisement -

“நேற்று அபிஷேக் ஷர்மா மிக உயரமாக அடித்த பந்தை கார்பின் போஸ் அபாரமாக பிடித்தார். ஆனால் அந்தப் பந்தை பிடிக்கும் பொழுது கேசவ் மகாராஜ் மற்றும் கார்பின் போஸ் இருவருக்கும் இடையே இருந்த ஒருங்கிணைப்பு அவ்வளவு அருமையாக இருந்தது. அது ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்கா அணியும் எவ்வளவு மன ஒற்றுமையுடன் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரமாக அமைந்தது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles