நீங்க நினைச்ச மாதிரி விளையாட இது ஒன்னும் இந்தியா பிட்ச் இல்ல.. அவரைப் பாருங்க எப்படி இருக்கார்னு.. கோலியை விமர்சிக்கும் ரசீத் லத்தீப்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முக்கியமான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி பார்படாஸ் நகரில் இன்று நடைபெற உள்ளது.

- Advertisement -

இதற்காக இரண்டு அணியிலும் மிக தீவிரமாக தயாராகி வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரசீத் லத்தீப் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஜாம்பவான் விராட் கோலிக்கு மோசமான தொடராக அமைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முதல் போட்டியில் இருந்து கடைசியாக நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டி வரை விராட் கோலியின் மோசமான பேட்டிங் பார்ம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 75 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார்.

- Advertisement -

இவரது பேட்டிங் சராசரி 15 ரன்களுக்கும் குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் விராட் கோலி இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர். இதனால் இன்று நடைபெற உள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி போட்டியில் விராட் கோலி நன்றாக செயல்படுவார் என்று ரசிகர்களும் நம்புகின்றனர்.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர், விராட் கோலி டி20 உலக கோப்பைக்கு சரியான திட்டங்களை வகுக்க வில்லை என்று கூறி இருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “விராட் கோலியின் மோசமான பேட்டிங் ஃபார்ம்க்கு அவரது திட்டத்தில் நடந்த குளறுபடிகளே காரணம். இது இந்தியாவில் பெங்களூர் மைதானம் போன்று இல்லை. அங்குள்ள சூழ்நிலை வேறு இங்கிருக்கும் சூழ்நிலை வேறு.

- Advertisement -

அதனால் விராட் கோலி அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு தனது பேட்டிங் திறனை மாற்றியிருக்க வேண்டும். இங்கு தரையில் பந்துகளை அவ்வளவு எளிதாக அடித்து ஆட முடியாது. இங்கு ஒட்டுமொத்த அணியே மொத்தமாக 171 ரன்கள் தான் குவித்து இருக்கிறது. இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் ரோகித் சர்மா இங்கு கடினமான சூழ்நிலைகளை சந்தித்து வருகிறார். முதலில் டாஸ் அவருக்கு சாதகமாக இல்லை.

இதையும் படிங்க:ரோஹித் நீங்க ஒன்னும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்.. இதை உலகுக்கே நாங்க தான் சொல்லிக் கொடுத்தோம்- பாக் முன்னாள் வீரர் பேட்டி

பேட்டிங்கில் விராட் கோலி விரைவில் ஆட்டம் இழந்து விட்டார். மழை பிரச்னை வேறு இருக்கிறது. நடுவர்களுக்காக காத்திருக்க வேண்டும். மழை முடிந்த பின்னர் திரும்பவும் களமிறங்கும் போது அந்த இன்டெண்ட் மாறாமல் ஆட்டத்தை அப்படியே எடுத்துச் செல்ல வேண்டும். போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த ரோஹித் சர்மா அரை இறுதியில் மிகச் சிறப்பாக விளையாடினார்” என்று பாராட்டி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles