விராட் ரோஹித்துக்கு விடை கொடுத்தது தான் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணம் – பாக் முன்னாள் வீரர் விமர்சனம்

கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்திய அணி t20 உலக கோப்பையில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்று சாதனை படைத்தது. உலகக் கோப்பை கொண்டாட்டங்கள் ஒருபுறம் நெகிழ்ந்து கொண்டிருக்க மறுபுறம் கோப்பையை வென்ற விதம் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரரான சோயப் அகதர் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்களை நீக்கியதே இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணம் என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “முதலில் இந்திய அணிக்கு எனது பாராட்டுக்கள். இந்திய அணி குறித்து கூற வேண்டும் என்றால் அவர்களது கட்டமைப்பு மிகவும் வலுவாக அமைந்தது. மேலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக அவர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். கௌதம் கம்பீர் கடும் பிரச்சனைகளைத் தாண்டி ரஞ்சியில் விளையாடும் இரண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தார். அதன் வெளிப்பாடு தான் தற்போது இந்திய அணி அதிரடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

அவர் சஞ்சு சாம்சனுக்கு கொடுத்த வாய்ப்புகள் தான் அவர் தொடரின் இறுதி கட்டத்தில் அதனுடைய ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் அபிஷேக் ஷர்மா ஒரு குழந்தை. இருப்பினும் அவர் தற்போது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்களுக்கு கடந்த டி20 உலக கோப்பையோடு ஓய்வு கொடுக்கப்பட்டது. மேலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததன் காரணமாகவே தற்போது இந்திய அணி எதிர்காலம் குறித்து எந்தவித அச்சமும் கொள்ளாமல் இருக்கிறது. மேலும் t20 உலக கோப்பையை வென்ற பின்னர் தோனி மற்றும் ரோஹித் போன்றவர்கள் கலந்து கொண்டது சிறப்பாக அமைந்தது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles