இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டி இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நேரத்தில் பிரபல பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இளம் இந்திய பேட்டர் அபிஷேக் சர்மாவை பாராட்டியுள்ளார்.
இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா இடம்பெறவில்லை என்றாலும் தற்போது அபிஷேக் சர்மா துபாயில் இருக்கிற அவரே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர், சந்தித்து அவரின் கிரிக்கெட் அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.
நான் உங்களை பார்த்து வியர்ப்படைந்தேன்:
X இல் பகிரப்பட்ட வீடியோவில் அக்தர் கூறியதாவது: “நல்ல வேளை அபிஷேக் விளையாடும் காலகட்டத்தில் நான் பந்து வீசவில்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் இங்கிலாந்துக்கு எதிராக சதம் பெற்ற, இன்னிங்ஸை நான் பார்த்தேன். அந்த இன்னிங்ஸில் அவர் விளையாடிய விதம் அருமையாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது, மேலும் ‘உங்கள் பலத்தை விட்டுவிடாதீர்கள்’ என்றும் அவருக்கு அறிவுரை வழங்கினேன்.
அக்தர் அந்த வீடியோவுக்கு, “இங்கே துபாயில் அபிஷேக் ஷர்மா என்ற அபாரமான திறமைசாலியை சந்தித்தேன். வரும் ஆண்டுகளில் அவர் கிரிக்கெட் உலகில் பல அதிசயங்களைச் செய்வார்” என்று தலைப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அபிஷேக், 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் நடந்த ஆட்டத்தில், அவர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்த பெருந்துணையாக இருந்தார்.
அபிஷேக்கின் இந்த அற்புதமான பேட்டிங், T20I கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இந்தியரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோருக்கான புதிய சாதனையைப் படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

