இந்தியாவில் முன்னாள் பெரிய வீரர்கள் கூட மோசமா பேசுறாங்க.. இனி பழைய நட்புறவு சுத்தமா இருக்காது.. இந்தியா பாக் டி20 WC போட்டி குறித்து முன்னாள் வீரர் பேட்டி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான t20 உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி தொடர்பான பிரச்சனைகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்து வருகிற 15ஆம் தேதி இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்களும் அரசியல் செய்கிறார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சக்லைன் முஸ்டாக் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேச அணிக்கு ஆதரவாக வருகிற 15 ஆம் தேதி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாது என்று அறிவித்ததை தொடர்ந்து, ஒரு வழியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மனம் மாறி மீண்டும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட சம்மதித்துள்ளது. இந்த சூழ்நிலையில் இனி இந்தியா பாகிஸ்தான் போட்டி நட்பு போட்டியாக இருக்காது எனவும், அதற்கான கதவு எப்போதோ அடைக்கப்பட்ட விட்டது என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “தற்போது விளையாட்டு மிகவும் மோசமாகிவிட்ட காரணத்தால் பழைய நட்புறவு மீண்டும் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதேசமயம் இந்திய பக்கத்தில் யாரும் இதனை விரும்பவும் இல்லை. அவர்கள் இதே நிலையை நீடிக்க விரும்பி தொடர்ந்து இதே மாதிரி செயல்படவும் இருக்கிறார்கள். மேலும் தொடர்ந்து இப்படியே தான் நடந்து கொள்வார்கள். இந்தியாவில் உள்ள முன்னாள் பெரிய வீரர்கள் கூட மோசமாக பேசி வெறுப்பை உருவாக்குகிறார்கள். கிரிக்கெட் என்பது அமைதிக்கான விளையாட்டு” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles