ரோஹித் நீங்க ஒன்னும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்.. இதை உலகுக்கே நாங்க தான் சொல்லிக் கொடுத்தோம்- பாக் முன்னாள் வீரர் பேட்டி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி இன்று பார்படாஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான இன்சமாம் உல் ஹக் ஹர்sதீப் சிங் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பதினைந்தாவது ஓவரில் கூட பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வது எப்படி என்று கேள்வி கேட்ட நிலையில் அதற்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காட்டமாக பதில் அளித்த நிலையில், மீண்டும் இன்சமாம் உல் ஹக் ரோகித்துக்கு மீண்டும் பதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான சூப்பர் 8 போட்டியில் ஆட்டத்தின் 15 வது ஓவரை வீசிய வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங்குக்கு மட்டும் எப்படி புதிய பந்தில் கூட ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் கேள்வி எழுப்பியிருந்தார். பொதுவாக பழைய பந்தில் தானே ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் ஆனால் இவருக்கு புதிய பந்தில் ஆட்டத்தின் இடையில் கூட எப்படி ஆகிறது என்று கேள்விகளை எழுப்பியிருந்தார்.

- Advertisement -

இதற்கு சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரோகித் சர்மா இது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்க, அதற்கு மைதானத்தின் சூழ்நிலை மற்றும் மற்ற நாடுகளை விட வெஸ்ட் இண்டீஸில் வெயில் அதிகமாக இருக்கும் மற்றும் ஆடுகளங்கள் வறண்டு காணப்படுவதாலும் பந்து ரிவர்ஸ் ஸ்விங்க் ஆகிறது. மேலும் இது போன்ற கேள்விகளை கேட்பதற்கு முன்னாள் சற்று மூளையை பயன்படுத்த வேண்டும் என்று காட்டமாக பதில் அளித்திருந்தார்.

ரோகித் சர்மாவின் காட்டமான பதிலுக்கு மீண்டும் பதில் கூறியிருக்கும் இஞ்சமாம் உல் ஹக் ரிவர்ஸ் ஸ்விங் குறித்து ரோஹித் சர்மா எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம், ஏனெனில் ரிவர்ஸ் ஸ்விங்கை சொல்லிக் கொடுத்ததே பாகிஸ்தான் தான் என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “முதலில் ரோஹித் சர்மா பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என்பதை ஒப்புக்கொள்கிறார். இதனால் நாம் கூறியது சரியாக இருக்கிறது. பந்து எந்த மாதிரி ஸ்விங் ஆகிறது, ஆடுகளத்தின் வெப்பநிலை என்ன? என்பதை ரோகித் சர்மா எங்களுக்கு சொல்லித் தர வேண்டியது இல்லை.

- Advertisement -

ஏனென்றால் ரிவர் ஸ்விங்கை உலகிற்கு சொல்லிக் கொடுத்தது பாகிஸ்தான்தான். பத்திரிகையாளர்களை பொருத்தவரை முதலில் இது போன்று தவறான கேள்வியை தான் கேட்பார்கள். நான் கூறியது 15 வது ஓவரில் கூட பந்து இவ்வாறு செல்கிறது எனவே நடுவர்கள் கண்களைத் திறந்து வைத்து பார்க்க வேண்டும் என்று கூறினேன்.

இதையும் படிங்க:இதே நெனப்போட உள்ள வராதீங்க தென் ஆப்பிரிக்கா.. இந்தியாகிட்ட மாட்டிக்குவீங்க- ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை

ரோஹித் சர்மா மனதைத் திறந்து வைத்து பேசுமாறு கூறியிருக்கிறார். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் கண்களோடு மனதையும் திறந்து வைத்து பாருங்கள் என்று தான் நடுவர்களுக்கு கூறுகிறேன்” என்று இன்சமாம் உல்ஹக் கூறியிருக்கிறார். தற்போதைய இவரது கருத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles