டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில் வங்கதேச அணி பாதுகாப்பு சூழ்நிலை கருதி இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோறி கேட்க, அதற்கு மறுத்த ஐசிசி வங்கதேச அணியை தொடரிலிருந்து நீக்கியது. இதற்க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆதரவு அளிக்கும் விதமாக இந்தியாவுடன் நடைபெற உள்ள லீக் போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கு பெறாது என்று அதிரடியாக அறிவித்தது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது ஐசிஐசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இது குறித்த கருத்து தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான பாசித் அலி பேசும்போது “இந்த கலாச்சாரத்தை முதலில் ஆரம்பித்ததே இந்தியா தான். அப்போதெல்லாம் இந்திய அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியது. இப்போது எங்கள் அரசாங்கம் விளையாட வேண்டாம் என்று கூறுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் மட்டும் செய்வது சரி என்றால் நாங்கள் செய்வதும் சரிதானே. 1996 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையில் விளையாட மறுத்தன. அப்போதெல்லாம் எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால் இப்போது மட்டும் பாகிஸ்தான் அணியை தடை செய்வோம் என்று பேசுகிறார்கள் தைரியம் இருந்தால் செய்து பாருங்கள்” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

