பள்ளி சிறுவர்களை விட மோசம்.. இந்திய அணி ஒரு காகித புலி.. நியூசிலாந்து வேற லெவல் – பாகிஸ்தான் அகமத் சேஷாத் விமர்சனம்

இந்திய அணி 12 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக தங்களது மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 36 வருடங்கள் கழித்து நியூசிலாந்த அணி இந்தியா மண்ணில் தங்களது முதல் டெஸ்ட் வெற்றியும் பதித்துள்ளது. இந்த நிகழ்வு கிரிக்கெட் வட்டத்தில் பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

- Advertisement -

இந்தியாவுக்கு நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்துள்ளது. இதில் பெங்களூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை அடுத்து அடுத்த டெஸ்ட் போட்டியாள புனே டெஸ்ட்லாவது இந்திய அணி வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் யாருமே எதிர்பாக்காத விதமாக மீண்டும் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

- Advertisement -

இதை குறித்து பாகிஸ்தானில் முன்னாள் வீரராக அகமத் சேஷாத்
தனது விமர்சனங்களை தனது யூடியூப் சேனல் மூலமாக அடுக்கியுள்ளார். இது இந்திய ரசிகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

“நியூசிலாந்து இந்தியாவுக்கு வந்து தங்களுக்கு இந்திய அணியை தோற்கடிக்க உரிமை உண்டு என்பது போல வீழ்த்தியுள்ளது, குழந்தைகளை போல் தோற்கடித்துள்ளது. இப்போது மக்கள் இந்திய அணியை காகித புலிகள் அவர்கள் வீட்டிலே தோற்றுவிட்டார்கள் என்று கேலி செய்து வருகின்றனர்” என்று ஷெஹ்சாத் தனது யூடியூப் சேனலில் கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இந்தியா 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது (முதல் டெஸ்டில்), ரோஹித் சர்மா, ‘அனைவருக்கும் மோசமான நாள்’ என்று கூறியிருந்தார். ஆமா எல்லோரும் அதே ஒத்துக் கொண்டனர். ஆனால், இந்த டெஸ்ட் போட்டியிலும், நீங்கள் விளையாடிய விதம் மன நிறைவு தருவதாக இல்லை, தேவையற்ற பேச்சை நம்பவில்லை என்றும் ரோஹித் ஷர்மா கூறுகிறார் கடந்த இரண்டு டெஸ்டிலும் இந்த இரண்டு போட்டிகளும் பள்ளிச் சிறுவர்கள் விளையாடுவதைப் போன்றே நடந்துள்ளன.” என்று சொல்லி முடித்துள்ளார்.

- Advertisement -

இந்த வரலாற்றுத் தோல்வி இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பையும் பாதித்துள்ளது. இனி மீதமிருக்கும் ஐந்து போட்டிகளில் குறைந்தது நான்கு போட்டிகளாவது வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles