அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சைமன் டவுல் சில கிண்டலான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் இந்திய அணிக்கு ராசி இல்லாத மைதானம் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை பதிவிட்டு வருகிறார்கள். அதற்குக் காரணம் 2024ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் உலக கோப்பை இறுதி போட்டியை இந்த மைதானத்தில் தான் தோற்றது. அதேபோல நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இதுகுறித்து சைமன் டவுல் கூறும்போது ” உலகின் மிக அமைதியான இடங்கள் என்று எடுத்துக் கொண்டால் நூலகமும் அண்டார்டிகாவும் என்று மக்கள் கூறுவார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை இந்திய அணி தோற்கும் போது அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் தான் உலகின் மிக அமைதியான இடம்” என்ற கிண்டலாக பேசியிருக்கிறார். இந்த கருத்தை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

