இந்த இந்திய அணியை எப்படிங்க வீழ்த்துறது.? திட்டம் வகுத்த இங்கிலாந்து முன்னாள் வீரர்கள்.. சுவாரசியமான தகவல்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதன் கடைசி லீக் ஆட்டம் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதற்குப் பிறகு சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடக்க உள்ள நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் இந்திய அணியை பொறுத்தவரை இதுவரை தோல்வி காணாத அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

இக்கட்டான சூழ்நிலையிலும் மீண்டும் போராடி வந்து இந்திய வீரர்கள் வெற்றி பெறுவதில் கில்லாடியாக உள்ளனர். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து முன்னால் கிரிக்கெட் வீரர்கள் நடத்திய இணையதள நிகழ்ச்சியில் பங்குபெற்ற முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களான அலைஸ்டர் குக், டேவிட் லாயிட் பங்கு பெற்று இந்திய அணியை வீழ்த்தும் வியூகம் எப்படி என்று சில குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.

- Advertisement -

அதில் டேவிட் லாயிட் கூறும்போது “இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா போன்ற அதிரடி தொடக்க ஆட்டக்காரர்கள் கடந்த 5 இன்னிங்ஸ்களில் 4 இன்னிங்ஸ்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்த போதிலும் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெறுகிறதே? இந்திய அணியை வீழ்த்துவது எப்படி? என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த குக், இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்றால் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் அதைத் தவிர வேறு வழியில்லை. முதலில் பேட்டிங் செய்து ஸ்கோர் போர்டில் அதிக ரன்கள் குவிக்க வேண்டும். அதன் பிறகு இந்தியாவிற்கு ஓவருக்கு 9 அல்லது 10 ரன்கள் வீதம் தேவைப்படும். அப்போது விக்கெட்டுகள் வீழ்த்தினால் மட்டுமே வாய்ப்பு உண்டு” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles