இவர் ஒருத்தர் போதுங்க.. 2011ல யுவராஜ் எப்படியோ இப்போ இவரு அதே மாதிரி இருக்காரு- கூறுகிறார் முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த்

தற்போது நடைபெற்று வரும் ஒன்பதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அரை இறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

- Advertisement -

2011ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது யுவராஜ் சிங் எப்படி செயல்பட்டாரோ அதேபோல இந்த முறையும் இந்த வீரர் இந்திய அணிக்காக இந்த வீரர் சிறப்பாக செயல்படுகிறார் என்று முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் பாராட்டியிருக்கிறார்.

- Advertisement -

இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக பெரிய எதிர்பார்ப்போடு வந்த இந்திய அணி அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இதுவரை விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று தற்போது அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது. லீக் சுற்றுகளில் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், அமெரிக்காவை வீழ்த்திய இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் பரம எதிரியான ஆஸ்திரேலிய அணியை ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை விட்டு ஆஸ்திரேலியா அணியை வெளியேற்றியது.

- Advertisement -

2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி இந்த போட்டியின் மூலம் ஆறுதல் தேடிக் கொண்டது. தற்போது அனைத்து துறைகளிலும் வலுவாக விளங்கும் இந்திய அணி இந்த முறை நிச்சயமாக டி20 உலக கோப்பையை கைப்பற்றும் என்று அனைத்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கூறி வருகிறார்கள். இந்திய அணி இங்கிலாந்து அணியோடு மோதும் அரை இறுதி போட்டி நாளை மாலை 6 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்க உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீசாந்த் 2011ஆம் ஆண்டு உலக கோப்பையில் யுவராஜ் சிங் எப்படி செயல்பட்டாரோ அதேபோல ஹர்திக் பாண்டியா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அதனால் இந்திய அணி இந்த உலகக் கோப்பை கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் சில முக்கிய கருத்துக்களை ஸ்ரீசாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ஸ்ரீ சாந்த் விரிவாக கூறும்பொழுது ” 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக யுவராஜ் சிங் பேட்டிங், பந்து வீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் எப்படி செயல்பட்டாரோ அதேபோல தற்போது இந்த உலக கோப்பையிலும் ஹர்திக் பாண்டியா மிகச் சிறப்பாக செயல்படுவதாக நான் கருதுகிறேன். எனவே ரோகித் சர்மா இந்த உலக கோப்பையை கைப்பற்றினால் நாம் யாரும் ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இருக்காது” என்று ஸ்ரீசாந்த் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:ரோகித் சர்மா ஃபார்ம் அவுட்னு எவ்வளவு பேசினாங்க.. ஒரே ஒரு இன்னிங்ஸ்தான்.. என்ன ஆச்சுன்னு பாருங்க- கில்கிறிஸ்ட் பாராட்டு

ஸ்ரீசாந்த் கூறியதைப் போலவே ஹர்திக் பாண்டியா மூன்று துறையிலுமே மிக அபாரமாக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் அவரது ஃபார்ம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், அதை அனைத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் டி20 தொடரில் மட்டுமே கவனம் செலுத்தி தற்போது அனைத்து விமர்சனங்களுக்கும் தனது பர்பாமன்ஸ் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles