இவங்க 4 பேர் சொதப்புனா ஆப்கானிஸ்தான்கிட்டயே நம்ம தோக்க வேண்டியது தான்.. கூறுகிறார் இர்பான் பதான்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது லீக் போட்டிகள் நிறைவடைந்து சூப்பர் 8 சுற்றை எட்டி இருக்கின்றன. இவை அனைத்தும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற உள்ளன.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி குறித்தும், இந்திய அணி விளையாட போகும் அணிகள் குறித்தும் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பையில் வெற்றிப் பாதையில் பயணிக்கும் இந்திய அணி, வரிசையாக அமெரிக்கா, பாகிஸ்தான், அயர்லாந்து என மூன்று போட்டிகளை வெற்றி பெற்று தற்போது அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியும் அடுத்த போட்டியில் வங்கதேச அணியையும், மூன்றாவதாக ஆஸ்திரேலியா அணியையும் எதிர்கொள்ள இருக்கிறது.

- Advertisement -

இந்த இரண்டு அணிகளையும் இந்தியா வென்று விடும் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டாலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டி மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஆஸ்திரேலியா அணி லீக் போட்டிகளில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் விளையாடி வருகிறது. இதனால் இந்திய அணியை விட ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைகளுக்கு நன்கு பழக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில் இந்த நான்கு வீரர்கள் இந்திய அணிக்கு கட்டாயம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும். அப்போதுதான் வெற்றி பெற முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது ” இந்திய அணிக்கு சிறப்பாக சூரிய குமார் யாதவ் பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம். ஏனென்றால் இங்கு உள்ள ஆடுகளங்கள் சுழற் பந்து வீச்சுக்கு நன்கு சாதகமாக இருக்கும்.

- Advertisement -

எனவே சூர்யா இங்குள்ள மைதானங்களை கணித்து மெதுவான ஆடுகளங்களுக்கு எதிராக எப்படி விளையாடுகிறார் என்பதைப் பொறுத்தே போட்டி அமையும். மேலும் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம். ஏனெனில் மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு அவர்கள் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய வீரர்களாக இருப்பார்கள்.

இதையும் படிங்க:என்ன டீம் இது.. நான் பார்த்ததிலேயே மோசமான ஒரு டீம்னா அது இதுதான்.. கேரி கிரிஸ்டன் விளாசல்

விராட் கோலி தனது பேட்டிங்கை கண்டுபிடித்து அவரது வழியில் முன்னேறுவார். இந்த சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக இருப்பதால், இந்த இரு அணிகளுக்கு எதிராகவும் கடுமையாக போராட வேண்டி இருக்கும். மேலும் இந்திய அணியை விட ஆஸ்திரேலியா அணிக்கு இங்குள்ள மைதானங்கள் நன்கு பழக்கப்பட்டிருக்கும். இதனால் இந்திய அணிக்கு போட்டி கடும் சவால் இருப்பதாக இருக்கும் “என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles