சுப்மன் கில்லை எப்படி இந்திய அணியில் இருந்து தூக்குவீங்க?. அவர் எப்படிப்பட்ட வீரர் தெரியுமா.? ஆதரவு கொடி தூக்கும் யுவராஜ் சிங் தந்தை

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட டி20 உலக கோப்பைக்காண 15 பேர் கொண்ட அணியில் துணைக் கேப்டனாக முன்பு செயல்பட்ட சுப்மான் கில் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது நீக்கத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஆதரவு கிடைத்தது. ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் பல இன்னிங்ஸ்களில் அவரது பேட்டிங் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அவரது நீக்கத்திற்கு யுவராஜ் சிங்கின் தந்தையும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான யோகராஜ் சிங் தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். ஒரு நான்கு இன்னிங்ஸ் விளையாட வில்லை என்றால் ஒரு துணை கேப்டனையே அணியிலிருந்து தூக்குவதா? என்று சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “சுப்மான் கில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்தவர், ஒரு நான்கு அல்லது ஐந்து இன்னிங்ஸ்கள் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அவரை அணியிலிருந்து தூக்குவது எந்த வகையிலும் நியாயம் இல்லாதது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 100 வாய்ப்புகள் வழங்கப்பட்டால் அதில் 10 வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கெல்லாம் வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் போன்ற திறமையான வீரரை அணியில் இருந்து நீக்கியது ஏன்? அபிஷேக் சர்மாவும் ஒரு சில போட்டிகள் விளையாடவில்லை என்றால் அவரையும் அறையில் இருந்து தூக்குவீர்களா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles