கேப்டன் பொறுப்புலாம் அப்புறம் பாத்துக்கலாம்.. முதல்ல இது மேல கவனம் செலுத்துங்க.. சூரியகுமார் யாதவுக்கு ஸ்ரீகாந்த் அறிவுரை

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆனது வருகிறது பிப்ரவரி மாதம் முதல் நடைபெற உள்ள நிலையில் இதற்காக இந்திய அணி தீவிரமான முறையில் தயாராகி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் சமீபகாலமாக டி20 கிரிக்கெட்டில் மோசமான பேட்டிங் சரிவை சந்தித்து வருகிறார். கடந்த 26 இன்னிங்ஸ்களாக அவர் பெரிய ரன்கள் குவிக்க போராடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் டி20 உலக கோப்பை மிகவும் நெருக்கமாக இருப்பதால் அவரது பேட்டிங் பார்ம் இந்திய அணிக்கு மிகவும் தேவையாக உள்ளது. அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து பலரும் தங்களது வருத்தத்தை தெரிவிக்கும் நிலையில் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இது குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “சூரியகுமார் யாதவ் முதலில் தனது பேட்டிங் சரிவை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு முதலில் தன் பேட்டிங்கின் மீது கவனம் செலுத்த வேண்டும். கேப்டன் பொறுப்பை அப்புறம் கவனித்துக் கொள்ளட்டும். முதலில் தன் பேட்டிங்கின் மீது அவர் கவனம் செலுத்தினால்தான் இந்திய அணி நல்ல நிலைமையில் இருக்கும். அவர் பேட்டிங் அவருக்கு நன்றாக வந்தால் கேப்டன் பொறுப்பிலும் அவர் சிறப்பாக செயல்படுவார். ஏனென்றால் அவர் எப்போதுமே அவர் நல்ல கேப்டன் தான்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles