இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா காயம் அடைந்திருப்பது சற்று கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் ரோகித் சர்மா குறித்தும் பும்ரா குறித்தும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரில் விளையாடி வருகிற சூழ்நிலையில், இரண்டாவது போட்டியில் பும்ரா காயம் அடைந்திருப்பது சற்று கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தற்போது இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை பும்ராவை மட்டுமே அதிகம் சார்ந்து இருக்கிறது. மேலும் முகமது ஷமி காயம் காரணமாக விளையாடாத நிலையில் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்த போட்டிக்கான திட்டமிடல் குறித்து இந்திய அணி ஆலோசித்து வருகிறது.
மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷியும் தற்போது சுமாராக இருக்கும் நிலையில் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்கு இந்திய அணி கடுமையாக உழைத்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் பும்ராவின் உடல்நிலை பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று எனவும் அவர் மட்டுமே இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்வதால் ரோஹித் சர்மாவிற்கு அதிக பொறுப்புகள் இருக்கிறது என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து முகமது கைப் விரிவாக கூறும்போது “இந்திய அணி இன்னும் தொடரை இழக்கவில்லை தற்போது ஒன்றுக்கு ஒன்று என்ற சமநிலையில் மட்டுமே உள்ளதால் அடுத்த போட்டிக்கான திட்டமிடல் குறித்து ஆராய வேண்டும். இதனை சரியான முறையில் செயல்படுத்த வேண்டியது அவசியம். ரோகித் சர்மாவின் கேப்டன்ஷி சுமாராகத்தான் இருந்தது. இருப்பினும் பும்ராவை பாதுகாக்கும் பொறுப்பு அவருக்கு கூடுதலாக இருக்கிறது.
இதனால்தான் அவருக்கு நீண்ட ஸ்பெல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே பந்துவீச்சாளரை மட்டுமே தற்போது இந்திய அணி நம்பி இருக்கிறது. ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் விளையாடவில்லை. மேலும் ரோஹித் சர்மா பும்ராவின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவருக்கு அதிக ஓவர்கள் கொடுக்கவில்லை. மேலும் பும்ராவுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது” என்று கூறி இருக்கிறார்.

