இந்திய கிரிக்கெட் அணி நடப்பு டி20 உலக கோப்பையில் அடுத்ததாக ஜிப்பாப்வே அணிக்கு எதிராக பலப்பரீட்சை நடத்த இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதி ரேசில் இருக்க முடியும். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் மூன்றாவது வரிசை ஆட்டக்காரரான திலக் வர்மா சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதுவரை அவர் ஐந்து போட்டிகளில் விளையாடி மொத்தமாக 107 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார். மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 118 ஆக மட்டுமே இருக்கிறது. ஆங்கர் ரோல் எடுத்து நிதான ஆட்டத்தை கடைபிடித்து அதற்கு பின்னர் அதிரடியாக விளையாடும் திலக் வர்மா, அதிரடியை விட்டுவிட்டு மீண்டும் தனது பழைய ஆட்டமடைக்கு சென்று விராட் கோலி போன்று நிலையாக நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்று முகமது கைப் அறிவுறுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு ஆங்கர் ரோல் விளையாட திலக் வர்மா நிச்சயம் சரியாக இருப்பார். எனவே அவர் தனது ஆட்ட முறையை மாற்றாமல் முதலில் நிதானமாக விளையாடி அதற்கு பின்னர் அதிரடியாக விளையாட வேண்டும். இதற்கு சரியான உதாரணமாக கூறினால் விராட் கோலியை சொல்லலாம். அவர் முதலில் நிதானமாக விளையாடிவிட்டு அதற்கு பின்னர் தனது அதிரடி ஆட்டத்தை துவங்குவார். எனவே அவரைப் போல திலக் வர்மா விளையாட வேண்டும்” என்று கைஃப் அறிவுறுத்தி இருக்கிறார்.

