பாவம்பா அந்த பையன்.. இஷான் கிஷன் அடிச்ச அடில.. நான் நியூசிலாந்திலேயே இருக்கலாம்னு அவர் நினைக்கலாம் – இந்திய முன்னாள் வீரர்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக டி20 உலக கோப்பை தொடரில் விளையாட உள்ள நிலையில் பேட்டிங் வரிசை மிகவும் வலுவானதாக காணப்படுகிறது. அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், கேப்டன் சூர்யா மற்றும் ஹர்திக் பாண்டியா என படைபலம் பொருந்திய பேட்டிங் வரிசை உள்ளது. அதிலும் இந்திய அணியில் சில காலமாக ஓரம் கட்டப்பட்டிருந்த இஷான் கிஷன் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து தனது முத்திரையை பதித்து வருகிறார்.

- Advertisement -

இந்த நியூசிலாந்து தொடரை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட அவர், ஐந்தாவது போட்டியில் சதம் அடித்து டி20 உலக கோப்பையில் விளையாடுவதை 100 சதவீதம் உறுதி செய்தார். நேற்று மட்டும் 10 சிக்ஸர்கள் அவர் மட்டுமே அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வு குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இஷான் கிஷன் குறித்து பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “இஷான் கிஷனின் பேட்டிங் பார்ப்பதற்கு பிரமிப்பாக உள்ளது. அதுவும் சோதிக்கு எதிராக 12வது ஓவர் ஆட்டத்தின் போக்கையே முற்றிலுமாக மாற்றியது. அவர் தான் நியூசிலாந்திலேயே இருந்திருக்கலாம் என்று நினைத்திருக்க கூடும். இஷான் கிஷன் ஆடும் போது அந்த இடத்திலேயே போட்டியை முடித்து விடுகிறார். அவர் இந்திய அணியை கட்டளையிடும் இடத்திற்கு எடுத்து செல்கிறார். அவர் யார் எந்த பவுலர் என்பதையெல்லாம் பார்ப்பது கிடையாது. இப்போது அபிஷேக் ஷர்மா இல்லையென்றால் இஷான் கிஷன் என்று தெரிந்து விட்டது. அவருடைய ஆட்டம் மூச்சு அடைக்க வைக்கிறது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles