வருண் மும்பை வீரராக இருந்தால்.. அதிக அளவில் கொண்டாடப்பட்டிருப்பார்.. தமிழ்நாட்டு பையனா போனதால யாரும் கண்டுக்கல – ஸ்ரீகாந்த் ஆதங்கம்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வருகிற ஞாயிற்றுக்கிழமை எதிர்த்து விளையாட உள்ளது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இந்திய அணி பேட்டிங் பவுலிங் என இரண்டு துறைகளிலும் வலுவான அணியாக உள்ளது.

- Advertisement -

அதேபோல இந்த தொடரில் தென் ஆப்ரிக்க அணியும் வலுவான அணியாக திகழ்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக கருதப்படும் வருண் சக்கரவர்த்தி இந்திய அணிக்குத் தேவையான சமயங்களில் விக்கெட்டுகள் கைப்பற்றி ஒரு மேட்ச் வின்னர் ஆக திகழ்ந்து வருகிறார். நெதர்லாந்து அடிக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி அந்த போட்டியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் வருண் சக்கரவர்த்தி மும்பை வீரராக இருந்தால் அதிக அளவில் கொண்டாடப்பட்டு இருப்பார் எனவும், அவர் தமிழக வீரராக இருப்பதால் அவருக்கு போதிய கிரெடிட் கொடுக்கப்படுவதில்லை என்று இந்திய முன்னாள் தேர்வு குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் தனது ஆதங்கத்தை பகிரும் போது “வருண் சக்கரவர்த்தி மும்பை வீரராக இருந்திருந்தால் இன்னும் அதிக அளவில் கொண்டாடப்பட்டிருப்பார். ஆனால் இங்கு வருண் அமைதியாக வந்து பந்து வீசி சென்று விடுகிறார். அவர் குறித்து யாரும் டைப் செய்து பேசுவதில்லை. மக்கள் இன்னும் அவரை புரிந்து கொள்ளவில்லை. பும்ரா எப்படி தனித்துவமான பவுலரோ அதேபோலத்தான் இவரும். யாரும் இவரை அவ்வளவு எளிதாக இன்னொரு வருணை உருவாக்கி விட முடியாது. தற்போது மிகச் சிறந்த பவுலராக அவர் இருக்கிறார்” என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles