கௌதம் கம்பீர் நீ அந்தப் பிளேயருக்கு அநீதி இழைக்கிற.. இதன் விளைவை இந்திய அணி தான் சந்திக்கப் போகுது.. கிருஷ்ணமாச்சாரி விமர்சனம்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வருகிற புதன்கிழமை நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தாலும், கே.எல். ராகுலின் பேட்டிங் ஆர்டரை குறித்து புதிய சர்ச்சையை எழுந்துள்ளது. வழக்கமாக 5 இடத்தில் பேட்டிங் செய்து வந்த கே.எல். ராகுல் தற்போது 6 இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால், அவரின் ரன்களிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் முறையே 2 மற்றும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார்.

- Advertisement -

இந்த புதிய மாற்றத்தை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல் ராகுலின் திறமையை இந்திய அணி நிர்வாகம் தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

- Advertisement -

இந்த அணுகுமுறை நியாயமற்றது:

ஸ்ரீகாந்த், தனது யூடியூப் சேனலான ‘சீக்கி சீக்கா’ வீடியோவில் கூறினார்: ஷ்ரேயஸ் ஐயர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், இது இந்திய அணிக்குப் பெரும்பலமாக இருக்கிறது. ஆனால், கே.எல். ராகுலின் ஆர்டரை குறித்து வருந்துகிறேன். ஆம், அக்ஸர் பட்டேல் 30, 40 ரன்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார், ஆனால் கே.எல். ராகுலுக்கு வழங்கப்படும் அணுகுமுறை நியாயமற்றது. அவரது கடந்த சாதனைகளை கவனித்து பாருங்கள்.

அவர் 5வது ஆர்டரில் அபாரமான சாதனை படைத்திருக்கிறார். அணியின் நிர்வாகம் அவரைப் பற்றிச் சரியாக என்ன நினைக்கிறது என்று எனக்கு புரியவில்லை. அவர் 6 அல்லது 7வது இடத்தில் வந்தால், 6-7 ரன்கள் மட்டுமே எடுக்க முடியும். இது அவருக்கு அநீதி இழைப்பது போல் இருக்கிறது.”

- Advertisement -

என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்:

“கம்பீர், நீ செய்வது முற்றிலும் தவறானது. ஆம், சூழ்நிலை பொருத்தமாக இருக்கும்போது, அக்சரை ஐந்தாவது இடத்தில் நிறுத்தலாம். ஆனால், இதனை தொடர்ச்சியான உத்தியாக செயல்படுத்த முடியாது. இப்படியே போனால், மிக முக்கியமான போட்டிகளில் நாம் தோல்வியை தழுவ நேரிடும். அதுதான் எனது கவலையாக உள்ளது.

வெறும் இடது-வலது கூட்டணியை முன்னிட்டு இதை நீ சரிபடுத்த முடியாது. முதல் நான்கு இடங்களில் வீரர்களின் கூட்டணி முக்கியத்துவம் இல்லை என்று நீ நினைக்கிறாயா? அது ஏன் ஐந்தாவது இடத்தில் தான் இந்த கூட்டணி தேவைப்படுகிறதா?” என்று தனது கேள்வியை எழுப்பி உள்ளார், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles