நான் பேட்டிங் செய்ய வர்றப்போ.. இவங்க மூணு பேரும் எனக்கு எதிரா இதைத்தான் பண்ணுவாங்க.. தினேஷ் கார்த்திக் பேட்டி

தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரோடு தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். இவர் இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தாண்டு ஐபிஎல் தொடர் தினேஷ் கார்த்திக்கு மறக்க முடியாத தொடராக அமைந்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். தொடர்ச்சியாக 7 தோல்விகளை பெற்று அதற்குப் பிறகு ஆறு வெற்றிகளை பெற்று பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தினேஷ் கார்த்திக் தன்னை இந்திய வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்ததாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரை பொருத்தவரை கேப்டனாக விளையாடிய போதும் சரி, அல்லது ஒரு சாதாரண வீரராக விளையாடினாலும் ஸ்டம்புக்கு பின்னால் பந்துவீச்சாளர்களுக்கு ஏதேனும் ஆலோசனைகளை கூறிக் கொண்டிருப்பார். ஒரு வீரரை வம்புக்கு இழுப்பதோ அல்லது தேவையில்லாத வார்த்தைகள் கூறவோ தவறான முறையில் எதுவும் நடந்து கொள்ள மாட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் விளையாடும் போது இந்திய வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் நட்பு ரீதியாக தன்னை ஸ்லெட்ஜிங் செய்திருப்பதாக கூறி இருக்கிறார்.

இது குறித்து தினேஷ் கார்த்திக் விரிவாக கூறும் பொழுது
“நான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடுவதற்கு முன்பாக வேறொரு அணியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது நான் பேட்டிங் செய்ய களத்திற்கு உள்ளே வந்தால் விராட் கோலி என்னை கேட்ச் பிடித்து வெளியேற்றும் போது பென் ஸ்டோக்ஸ் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார். இது ஜாலியாக வழி அனுப்பி வைக்கும் முறை தான்.

- Advertisement -

இதே போல நான் பேட்டிங் செய்ய உள்ளே வரும்போது ஹர்திக் பாண்டியா அடுத்தது உங்களுக்கு லெக் ஸ்பின்னர் தான் வருவார் என்று கேலி செய்வார். அவர் என்னை ஜாலியாக கேலி செய்தாலும் பாண்டியாவும் நானும் நல்ல நண்பர்கள். களத்திற்கு வெளியே கிரிக்கெட் குறித்து நிறைய நாங்கள் பேசிக் கொண்டிருப்போம்.

இதையும் படிங்க:இதுவே கடைசி வாய்ப்பு.. 2024 டி20 உலக கோப்பையோடு ஓய்வு பெற வாய்ப்புள்ள ஆறு நட்சத்திர வீரர்கள்

இதே போல மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்தபோது ரோகித் சர்மா அடுத்த டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடிக்க திட்டமா? என்று என்னை கேலி செய்தார். இது சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது நடைபெற்றது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த மூன்று இந்திய வீரர்கள் தன்னை ஸ்லெட்ஜிங் செய்ததாக தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles