2026 டி20 உலக கோப்பைக்காண அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இடம் பெறவில்லை. மாறாக உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய இசான் கிசான் உலகக்கோப்பை தொடரில் இடம் பிடித்து விளையாட தயாராக இருக்கிறார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான தீப்தாஸ் குப்தா ரிஷப் பண்ட் இடம்பெறாமல் போனதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிய ரிஷப் பண்ட் நாக் அவுட் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறுவதற்கு பெரிய அளவில் உதவியாக இருந்தார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் தடுமாறினாலும் ரிஷப் பண்ட் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி லீக் சுற்றில் ஜொலித்தார். அதற்குப் பிறகு இந்திய அணியில் ஓரிரு வாய்ப்புகள் கிடைத்தாலும் முழுமையாக அவரால் விளையாட முடியாமல் போன காரணத்தால் அடுத்த உலக கோப்பைக்கு அவரது பெயர் இடம் தரவில்லை.
இதுகுறித்து தீப் தாஸ் குப்தா கூறும்போது “ரிஷப் பண்ட் முதலில் தொடக்க வீரரா? அல்லது மிடில் வரிசை பேட்ஸ்மனா? அல்லது பினிஷரா? என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். என்னை பொருத்தவரை அவர் டி20 கிரிக்கெட்டில் முதல் மூன்று இடங்களுக்குள் விளையாட கூடிய வீரர். ஒருநாள் கிரிக்கெட்டில் வேண்டுமானால் அவர் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் களம் இறங்கலாம். விஜய் ஹசாரே தொடரில் அவர் டெல்லி அணிக்காக களம் இறங்கி 70 ரன்கள் அடித்தார். முதலில் தான் எந்த இடத்திற்கு பொருந்துவேன் என்று அவர் உறுதிப்படுத்த வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

