ஆரஞ்சு தொப்பியை வென்றால் மட்டும் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது.. மீண்டும் விராட் கோலி வம்புக்கு இழுக்கும் அம்பத்தி ராயுடு

17 வது ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பியை விராட் கோலி பெற்றுள்ள நிலையில் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினால் மட்டும் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது என்று அம்பாதி ராயுடு மீண்டும் விராட் கோலி வம்புக்கு இழுத்துள்ளார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் சீசனில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய நிலையில் கொல்கத்தா அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. போட்டிக்குப் பிறகு இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு விருது வழங்கும் நிலையில் அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பியை விராட் கோலி வென்றார்.

- Advertisement -

இந்த சீசனில் விராட் கோலி மொத்தமாக 15 போட்டிகளில் ஒரு சதம் உட்பட மொத்தமாக 741 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்ராஜ் 583 ரன்கள் விளாசி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்திற்கும் இரண்டாவது இடத்திற்கும் கிட்டத்தட்ட 150 ரன்கள் வித்தியாசம் உள்ளது.

- Advertisement -

இந்த சீசனில் மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய விராட் கோலி 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆரஞ்சு தொப்பி வென்றுள்ளார். இதன் மூலம் இரண்டு முறை ஆரஞ்சு தொப்பியை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்திருக்கிறார்.

இந்நிலையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பாதிராய்டு ஆரஞ்சு தொப்பி குறித்து பேசுகையில்
“ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஸ்டார்க், ரசல், சுனில் நரேன் ஆகியோர் சிறப்பாக விளையாடியுள்ளனர். அனைவரின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியும்.

- Advertisement -

அதிக முறை நாம் இதுபோல் பார்த்திருக்கிறோம். ஆரஞ்சு தொப்பியை வெற்றி பெற்றால் மட்டுமே ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற முடியாது. அது ஒரு அணியின் கூட்டு முயற்சியால் மட்டுமே முடியும். அணியின் மற்ற வீரர்களும் 300,400 ரன்கள் அடிக்க வேண்டும். விராட் கோலி ஒரு ஜாம்பவான் வீரர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் விராட் கோலியின் தரம் மற்ற ஆட்டக்காரர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும்.

இதையும் படிங்க:மகேந்திர சிங் தோனியின் சாதனையை தவறவிட்ட பேட் கம்மின்ஸ்.. வாய்ப்பு இருந்தும் கோட்டை விட்டார்.. அவ்வளவு சீக்கிரம் தொட முடியுமா.?

இதனால் விராட் கோலி சற்று நிதானம் காக்க வேண்டும். அப்போதுதான் இளம் வீரர்கள் எந்தவித அழுத்தத்திற்கும் உள்ளாகாமல் நிதானமாக விளையாட முடியும்” என்று கூறி இருக்கிறார். ஏற்கனவே அம்பாதி ராயுடு மற்றும் ஆர்சிபி ரசிகர்களிடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மீண்டும் ஆரஞ்சு தொப்பி குறித்து அம்பத்தி ராயுடு பேசியிருப்பது விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles