நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 2-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.
புனேயில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது வியக்க வைக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா அணி இழந்ததைத் தொடர்ந்து, ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஷிப்பை கிரிக்கெட் வல்லுநர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அப்படி என்ன கூறினார்:
இதனைக் குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது: “ரோஹித் சர்மா ஒரு பெருமைக்குரிய மனிதர். அவர் இந்த ஏமாற்றத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அவரது உடல் மொழி பார்ப்பதற்கு நிதானமாக உள்ளதாக இருக்கலாம். ஆனால் அவர் மனதளவில் ஆழமாக காயப்பட்டு இருக்கிறார்.டெஸ்ட் தொடரின் தோல்வி ரோஹித்தையும் ஒட்டுமொத்த இந்திய அணியின் ஆடை அறையையும் ஆழமாக பாதித்துள்ளது” என்று கூறியுள்ளார்.
தினேஷ் கார்த்திக் அப்படி என்ன சொல்கிறார்:
இந்தியாவின் டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு ரோஹித் ஷர்மாவின் தலைமைத்துவத்தை குறித்து தினேஷ் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார். தினேஷ் கார்த்திக் கூறுகையில், “அவரது சிறந்த நிலையில் இல்லை என்பதே நான் உணர்கிறேன்; அவருக்கு இது கடினமான டெஸ்ட் போட்டியாக இருக்கிறது என்று நினைக்கிறேன்; அவர் தன்னால் முடிந்த அனைத்து யுக்திகளையும் செய்து பார்த்திருக்கிறார். ஆனால் அவர் மீது அதிக அழுத்தம் இருப்பதே என்னால் பார்க்க முடிந்தது, மேலும் அவர் அதிக ரன்கள் எடுக்கவில்லை. ஆக மொத்தத்தில் இது அவருக்கு ஒரு சிறந்த டெஸ்ட் போட்டியாக அமையவில்லை”.
“ரோஹித் சர்மா பேட்டிங்கில் சிரமப்படுகிறார், புனே டெஸ்டில் 0 மற்றும் 8 ரன்களை எடுத்திருக்கிறார். அவரது ஃபார்ம் தவிர, இந்திய கேப்டனின் ஆன்-பீல்டு தந்திரங்களும் ஆய்வுக்கு உள்ளாகியுள்ளன.அவர் இப்பொழுது சிந்தித்துக் கொண்டு இருப்பார், நான் என்ன சிறப்பாக செய்திருக்க முடியும்? நான் ஒரு எதிர் வினையாக யோசிக்கும் கேப்டனா..? அல்லது செயல் திறனாக யோசிக்கும் கேப்டனா..?அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தார் ஆனால் அது அவருக்கு பலன் அளிக்கவில்லை” என்று தினேஷ் கார்த்திக் இவ்வாறு கூறியுள்ளார்.

