தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னாடி.. அன்று இரவு நடந்தது இதுதான் – இந்திய முன்னாள் தேர்வாளர் பேட்டி

இந்திய அணியின் மகத்தான கேப்டன்களின் வரிசையில் மகேந்திர சிங் தோனி தனி இடத்தை பதித்திருக்கிறார். மூன்று வடிவிலான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்கிற பெருமை மகேந்திர சிங் தோனிக்கு எப்போதும் உண்டு. இந்த சூழ்நிலையில் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து எப்படி விலகினார் என்று இந்திய முன்னாள் தேர்வாளர் ஜத்தின் பரஞ்சப்பே மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

2014 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய எம் எஸ் தோனி, விராட் கோலிக்கு வழிவிட்டு ஒரு நாள் மட்டும் டி20 தொடரில் மட்டுமே கேப்டனாக பொறுப்பேற்று வந்தார். அதற்குப் பின்னர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் 2016ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை என இரண்டிலும் அரை இறுதி வரை இந்திய அணியை எடுத்துச் சென்றார். அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு முழுவதும் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த சூழ்நிலையில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என தோனியிடம் தயக்கத்துடன் எப்படி கூறினோம் என ஜத்தின் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் “தோனி ஒருநாள் வலைப்பயிற்சியில் நீண்ட நேரமாக பயிற்சி செய்து கொண்டிருந்தார். நானும் அப்போதைய தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் இருவரும், தயக்கத்தோடு தோனியிடம் சென்று ‘ நீங்கள் கேப்டன் பதவியில் இருந்து விலகி அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் நேரம் வந்துவிட்டது என்று கூறினோம்’. அப்போது டோனி சிறிது கூட முகம் சுளிக்காமல் அண்ணா இது மிகச் சரியான முடிவு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று கூறினார். அப்போது நாங்கள், நீங்கள் இதனை எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு கூற வேண்டும் என்று சொன்னோம். அன்று இரவே மின்னஞ்சல் வழியாக தோனி கேப்டன் பதவியில் இருந்து விலக விரும்புகிறேன் என்று மின்னஞ்சல் அறிவித்தார். அதற்குப் பிறகு நாங்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுத்தோம். கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் விராட் கோலிக்கு ஆதரவாக தான் எப்போதும் இருப்பேன்” என தோனி தெரிவித்ததாக அவர்கள் கூறினார்கள்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles