சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் கோப்பையை வெற்றி பெற்று மூன்றாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்ற முதல் அணி என்கிற சாதனையை படைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றாலும் அது சிறந்த அணி கிடையாது என்று தனது விமர்சனத்தை பதிவு செய்து இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு ஜோடி இறுதிப்போட்டியை இந்திய அணி வெற்றி பெறுவதற்கு சாதகமான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. மேலும் பும்ரா ஒட்டுமொத்த தொடரிலும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்திலும் அவர்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். எனவே இந்திய அணி இந்தத் தொடரில் சிறந்த அணி இல்லை தென்னாப்பிரிக்கா அதன் என்னை பொறுத்தவரை சிறந்த அணி.
இந்திய அணியை நான் தருண அணி என்று குறிப்பிடுவேன். அவர் சிறந்த தருணங்களை வென்றார்கள். லீக் சுற்று போட்டிகளில் அவர்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. மேலும் நாக் அவுட் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தடுமாறினார்கள். மேலும் பின் ஆலன் ஒரு போட்டியை மட்டும் அபாரமாக விளையாடினாரே தவிர அதற்குப் பிறகு இல்லை என்னை பொருத்தவரை தென் ஆப்பிரிக்கா தான் இதில் சிறப்பாக விளையாடியது. இந்தியாவில் தொடர்ந்து போட்டிகள் நடக்கும் வரை வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்தியா தான் அதிகம் செலுத்தும். பிசிசிஐ ஐசிஐசிஐ விட சக்தி வாய்ந்ததாக இருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.

