டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாவே அணிகள் மோதி விளையாடுகின்றன. அரையிறுதி ரேசில் இந்திய அணி நீடிக்க வேண்டுமென்றால் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்டீவ் ஹார்மிஷன் சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன கௌதம் கம்பீர் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கிறார். அவரது டெஸ்ட் பயிற்சியில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் டி20 உலக கோப்பையை வெற்றி பெற்று தன் பெயரை ஓரளவு நிலை நாட்ட வேண்டும் என்ற நெருக்கடியில் கம்பீர் இருக்கிறார். இருப்பினும் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கே தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் பேசும் போது “கௌதம் கம்பீர் இந்த டி20 உலக கோப்பையை வெல்ல மாட்டார் என்று எனக்குத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை கம்பீர் கடினமானவர். அவர் டிரெஸ்ஸிங் ரூமில் என்ன மாதிரியாக இருப்பார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் இந்த டி20 உலக கோப்பையை வெல்லவில்லை என்றால் அவர் பயிற்சியாளராக நீடிக்க முடியாது. எனவே அவர் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒரு நல்ல பயிற்சியாளருக்கு அடையாளம் தன் தவறுகளை ஒப்புக்கொண்டு அதை சரி செய்து கொள்ள வேண்டும். ஆனால் கம்பீரிடம் அந்த தன்மை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை” என்று பேசி இருக்கிறார்.

