விராட் கோலியின் தேவை இனி இந்திய அணிக்கு தேவையில்லை.. நிஜமா தான் சொல்றேன்.. இங்கிலாந்து முன்னாள் வீரர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவரான விராட் கோலி t20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் நிலையில் விராட் கோலியின் தேவை இனி இந்திய கிரிக்கெட் தேவையில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரான மாண்டி பனேசர் தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

டி20 உலக கோப்பை வென்ற பிறகு விராட் கோலி டி20 ஃபார்மட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அதற்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். மேலும் இப்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே தீவிரமாக கவனம் செலுத்தி வரும் விராட் கோலி அடுத்ததாக 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை வரை விளையாடுவதை அவர் முக்கிய குறிக்கோளாக வைத்திருக்கிறார்.

- Advertisement -

ஆனால் இது குறித்து மாண்டி பனேசர் கூறும் போது “விராட் கோலியின் தேவை இனி ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தேவை படாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவரது இடத்தை நிரப்ப இளம் வீரர்கள் சிறப்பான முறையில் தயாராகி வருகிறார்கள். அவரது தேவை தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டுமே உள்ளது. அவரது பேட்டிங் தொழில்நுட்பம், அவரது ஆக்ரோஷம் அணுகுமுறை என எதுவுமே இல்லாமல் இந்திய அணி தற்போது மிகவும் தடுமாறி வருகிறது. எனவே அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய வெற்றிடமாக உள்ளது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles