இந்தியா ஒன்னும் ஜெயிக்கவே முடியாத அணி இல்லை.. நான் சொல்ற மாதிரி செஞ்சா இங்கிலாந்து அணி நிச்சயமா வெல்லும் – முன்னாள் இங்கிலாந்து வீரர்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெற உள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட தயாராக இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் இந்த போட்டியை வெல்வதற்கு இரண்டு அணிகளும் மிக தீவிரமாக போட்டி போடும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

- Advertisement -

டி20 உலக கோப்பை பொறுத்தவரை இந்திய அணி தற்போது முதல் முறை இங்கிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இங்கிலாந்து அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்றால் இரண்டு பவுலர்களை குறி வைத்து இங்கிலாந்து வீரர்கள் தாக்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆலன் பார்டர் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “நான் இந்திய அணியை பார்த்த விதத்தில் கூற வேண்டும் என்றால் அவருடைய ஃபீல்டிங் மிகவும் சுமாராக இருக்கிறது. ஆனால் அவர்களுடைய பேட்டிங் யூனிட் மிகவும் வலுவாக உள்ளது. ஆனால் என்னை பொருத்தவரை இந்திய அணி வெல்லவே முடியாத அணி என்பது கிடையாது. இந்திய அணியின் பவுலிங் யூனிட் பார்த்தால் பலமானதாக தெரியும். ஆனால் அதில் ஒருவர் அடி வாங்கினால் அவருக்கு பதிலாக வந்து பவுலிங் போடுவதற்கு வேறு ஆள் இல்லை. இதனால் குறிப்பிட்ட இரண்டு வீரர்களை அவர்கள் தாக்கினால் இந்திய அணியை நிச்சயம் வெல்ல முடியும்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles