எப்போ பார்த்தாலும்.. இந்தியா மேல ஏதாவது குத்தம் சொல்லிட்டு சுத்துறாங்க.. உங்களுக்கு சம்பளம் வர்றதே எங்களால தான்.. எங்க லெவல் தெரியாம பேசுறீங்க – சுனில் கவாஸ்கர் பேட்டி

பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் இந்திய கிரிக்கெட் அணி மட்டும் பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லாமல் துபாயில் ஹைபிரிட் மாடல் முறைப்படி விளையாடி வருகிறதை விமர்சித்த, முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் நாசர் ஹுசைன் மற்றும் மைக்கேல் அதர்டனை இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.

- Advertisement -

உங்கள் அணியை பற்றி நீங்கள் பாருங்கள்:

கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ் டுடேவுடனான ஒரு பிரத்யேக உரையாடலின் போது; “இவர்கள் ( நாசர் ஹுசைன் மற்றும் மைக்கேல் அதர்டன்) எல்லோரும் புத்திசாலி மற்றும் அனுபவமுள்ளவர்கள் என்று தான் நான் நினைக்கிறேன். உங்களிடம் ஒன்று நான் கேட்க விரும்புகிறேன், உங்கள் அணி தகுதிப் பெறாததற்கான காரணங்களை நீங்கள் உண்மையில் ஆராய்கிறீர்களா? இல்லையா?. அதற்குப் பதிலாக இந்திய அணியை பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்களே, முதலில் உங்கள் சொந்த அணியின் நிலையை ஆய்வு செய்தீர்களா?

- Advertisement -

உங்கள் வீரர்கள் மனரீதியாக பலவீனமாக உள்ளனர். அவர்கள் தோற்பதை பற்றியும் வெற்றி பெறுவதைப் பற்றியும் குறித்தெல்லாம் உங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால், அவர்கள் இந்திய அணியே எதிர்ப்பதை மட்டும் பூர்த்தி செய்தால் போதும் என நினைக்கிறீர்கள்.

- Advertisement -

நீங்கள் உங்கள் அணியின் முடிவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டும். நீங்கள் உங்கள் நாட்டிற்காகவும், உங்கள் அணிக்காகவும் முழு உறுதிப்பாடுடன் செயல்பட வேண்டும். உங்கள் நாட்டிற்காக விளையாடுகிறீர்கள் என்றால், இந்த பொறுப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.”

அவர்கள் புலம்பிக்கொண்டே இருக்கட்டும்:

மேலும் அவர், “இந்தியா அதே பெற்றுள்ளது; இந்தியா இதை பெற்றுள்ளது என அவர்கள் புலம்பிக்கொண்டே இருக்கட்டும். நமக்கு கவனம் செலுத்த நிறைய பணிகள் உள்ளனர் அதில் நாம் கவனம் செலுத்துவோம். இப்படிதான் இந்திய அணியின் அணுகுமுறை இருக்க வேண்டும்.

- Advertisement -

இந்தியா தான் சர்வதேச கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் சக்தியாக இருக்கிறது—தரத்திலும், வருமானத்திலும், திறமையிலும், முக்கியமாக உலக கிரிக்கெட்டிற்கு வருவாய் உருவாக்குவதிலும். அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் பங்கானது டெலிவிஷன் மற்றும் மீடியா வருவாயில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும், ஏனெனில் அவர்களின் சம்பளமே இந்தியா கிரிக்கெட் கொண்டு வரும் வருவாயிலிருந்து தான் வந்து கொண்டிருக்கிறது”. என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணி லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் இரண்டு போட்டிகளிலும் விளையாடி தோல்வி அடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, ஜோ ரூட் சதம் அடித்த போதிலும், அவர்களால் 326 ரன்களை துரத்த முடியவில்லை. இதன் விளைவாக, பட்லர் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மார்ச் 1 ஆம் தேதி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மோதல், இங்கிலாந்து கேப்டனாக பட்லரின் கடைசி போட்டியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles