சிஎஸ்கே கிடையாது.. 2026 ஐபிஎல் கோப்பையை இந்த இரண்டு அணிகள் வெல்லதான் அதிக வாய்ப்பு – சுப்பிரமணியம் பத்ரிநாத் கணிப்பு

நடைபெற்று முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி அணிகளை சிறப்பாக செட் செய்துள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத் அடுத்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லப் போகும் இரண்டு அணிகள் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இரண்டு அணிகளும் மிகவும் கூலாக இருந்தார்கள். அவர்களின் இந்த நிலைக்கு மெகா ஏலத்தில் தேவையான வீரர்களை வாங்கி ஏற்கனவே செட் செய்து விட்டார்கள். நீங்கள் மினி ஏலத்தில் சுறுசுறுப்பாக செயல்படுகிறீர்கள் என்றால் மெகா ஏலத்தில் தவறு செய்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

- Advertisement -

இதனால் இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளும் கோபியை வெல்வதற்கு தகுதியான அணிகள் என்று நினைக்கிறேன். பெங்களூர் அணி பேக்கப் வீரராக வெங்கடேஷ் ஐயரை எடுத்திருக்கிறது என்றால் ஆர்சிபி எந்த அளவிற்கு வசதியாக இருக்கிறது என்று பாருங்கள். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று கேப்டன்கள் இருக்கிறார்கள். மேலும் ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துவிட்டு மும்பை அணிக்கு வந்திருக்கிறார். இவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றால் நான் ஆச்சரியப்படுவேன்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles