பும்ரா இல்லை.. அவர விட முக்கிய பவுலர் இவர் தான்.. டி20ஐ உலகக் கோப்பையை ஜெயிச்சு கொடுப்பார் பாருங்க – பத்ரிநாத் உறுதி

இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே தலைச்சிறந்த பவுலர்கள் என்ற உயரத்திற்கு வைத்துக் கொண்டாடப்படுபவர் ஜஸ்பிரித் பும்ரா. அவரின் இருப்பு அணிக்கு பந்துவீச்சில் கூடுதல் பலம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

- Advertisement -

2024 டி20 உலகக் கோப்பையை வென்றதில் பும்ராவின் பங்கு எந்த அளவுக்கு தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிவிட இயலாது. ஆனால் இருப்பினும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20ஐ உலகக் கோப்பையில் பும்ராவை விட இந்திய அணிக்கு மிக முக்கியமான வீரராக நம் தமிழ் வீரர் தான் இருப்பா என அண்மையில் சுப்ரமணியம் பத்ரிநாத் கூறியுள்ளார்.

- Advertisement -

அவர் கூறியதாவது, ” நடப்பு இந்திய டி20ஐ அணியில் பும்ராவை விட வருண் சக்ரவர்த்தி தான் மிகவும் முக்கியமான பவுலர். எதிரணியைக் கட்டுப்படுத் வேண்டுமெனில் பவர்பிளே, மிடில் ஓவர்ஸ், டெத் ஓவர்ஸ் என அனைத்து இடத்திலும் வந்து தன் சிறப்பைப் அணிக்கு பலம் சேர்க்கிறார். வருண் சக்ரவர்த்தி நம் இந்திய அணிக்கு ஒரு பெரிய சொத்து. “

- Advertisement -

” அவருக்கு நாள் நல்லதாக அமைந்தால், அது இந்திய அணிக்கே நல்ல நாளாக இருக்கும். வருகின்ற டி20ஐ உலகக் கோப்பையில் ஐக்கிய அணியின் ஆயுதமாகவும் எக்ஸ் ஃபேக்டராகாவும் வருண் திகழ்வார். ” எனப் புகழாரம் சூட்டியுள்ளார் பத்ரிநாத்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles