நீங்கதான் கேப்டனே இல்லையே.. அப்புறம் எதுக்கு விராட் இதெல்லாம் பண்றீங்க.. மேத்யூ ஹைடன் கேள்வி

இந்த ஐபிஎல் சீசனை பொருத்தவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியை பதிவு செய்து மொத்தமாக 7 போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

- Advertisement -

அடுத்ததாக பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் விராட் கோலியின் செய்கைகளை சுட்டிக்காட்டி இது போல் நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறி இருக்கிறார்

- Advertisement -

இந்த சீசனின் தொடக்கத்தில் பெங்களூர் அணி தொடர்ச்சியாக 7 போட்டிகளில் தோல்வி அடைந்து பரிதாபமான நிலையில் கடைசி இடத்தில் இருந்தது. இனி இழப்பதற்கு எதுவுமே இல்லை என்ற சூழ்நிலையில் உத்வேகம் அடைந்த பெங்களூர் அணி அதன் பிறகு தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று யாருமே எதிர்பாராத வகையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்தபோது பணிச்சுமையை காரணம் காட்டி தனது கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகினார். அவர் விலகியதற்கு பதில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிக் கொண்டிருந்த டுப்ளஸ்சிசை வாங்கி கேப்டனாக நியமித்தது. கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் முக்கியமான சூழ்நிலைகளில் களத்தில் விராட் கோலியின் தலையீடு இல்லாமல் இருந்ததில்லை.

அணியின் முக்கியமான சூழ்நிலைகளில் பந்துவீச்சாளர்களுக்கு ஓவர்கள் தரப்படுவது முதல் பீல்டிங் செட் அப் வரை, ஏதாவது ஒன்று செய்து கொண்டே இருப்பார். அதையும் தாண்டி கடந்த சில போட்டிகளாகவே விராட் கோலியின் செயல்பாடுகளில் அதிக தலையீடு இருப்பது போல் தெரிகிறது.

- Advertisement -

ஆர்சிபியின் பந்துவீச்சாளர் யாராவது ஒருவருக்கு கள நடுவர் வைட் அல்லது நோபால் என்று வழங்கினால் முதல் ஆளாக அம்பையரிடம் சென்று விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். மேலும் முக்கிய விவாதங்களில் கள நடுவரிடம் டு பிளஸ்சிஸ் செல்வதற்கு முன்பாகவே விராட் கோலி நடுவரிடம் சென்று ஆலோசனை நடத்துகிறார்.

இதையும் படிங்க:கப் ஜெயிச்சுட்டு வாங்க விராட்.. தோனி கூறி அந்த வார்த்தை.. நெகிழ்ச்சியில் விராட் கோலி

இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் மேத்யூ ஹைடன் கூறும் பொழுது
“விராட் கோலி தான் கேப்டன் பதவியில் இருந்து விலகி விட்டாரே. பிறகு ஏன் அம்பையரிடம் முக்கியமான கட்டங்களில் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பெங்களூர் அணியின் கேப்டன் தான் அம்பையரிடம் சென்று ஆலோசனை நடத்த வேண்டுமே தவிர விராட் கோலி ஈடுபடக் கூடாது” என்று ஹைடன் கூறி இருக்கிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது அடுத்த போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பெங்களூர் அணி இரண்டாவது அரையிறுதிக்கு தகுதி பெறும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles