இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அபிஷேக் சர்மா களம் இறங்கினார். அதற்கு முந்தையம் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக சஞ்சு சாம்சன் களம் இறங்கி 8 பந்துகளில் 22 ரன்கள் குவித்தார். இதில் 3 சிக்சர் 1 பவுண்டரி அடங்கும்.
இதற்கு முன்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோசமாக விளையாடியதன் காரணமாக இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த சூழ்நிலையில் அபிஷேக் ஷர்மா சிறிது உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட, நமீபியா அணிக்கு எதிரான தொடரில் களம் இறங்கிய சாம்சன் தனது இடம் குறித்து கவலைப்படாமல் 8 பந்துகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 22 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் லெஜன்ட் ஆடம் கில்கிரிஸ்ட் பேசும் போது “இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் ஊசலாடிக் கொண்டிருந்த போதும் அவர் ஒருபோதும் தனக்காக விளையாடியதில்லை. குறிப்பாக அந்த 8 பந்துகளில் 22 ரன்கள் என்பது மிகவும் சுயநலமற்ற ஒரு ஆட்டம் ஆகும். அவர் தன் நாட்டுக்காகவே எப்போதும் விளையாடுகிறார். தனது தனிப்பட்ட ஸ்கோரை விட அணியின் வெற்றியே முக்கியம் என்று நினைக்கும் வீரர் அவர்” என்று பெருமையாக பேசி இருக்கிறார்.

