பும்ரா ஒருத்தர் மட்டும்தான் இதை நம்புறாரு.. வேறு யாரும் இதன் மேல் நம்பிக்கை வைப்பது இல்லை.. ப்ரெட்லீ பேட்டி

9வது உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணி 2007ஆம் ஆண்டுக்கு பிறகு உலகக்கோப்பை வெல்லாததால் இந்த முறை வென்றே ஆக வேண்டும் என்ற தீவிரம் காட்டி வருகிறது.

- Advertisement -

டி20 கிரிக்கெட் தற்போது நவீன காலகட்டத்திற்கு ஏற்ப மெருகேறி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட் என இரண்டை விடவும் டி20 கிரிக்கெட் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெற்றுள்ளதால், அதிலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் பிரட்லீ கூறியிருக்கிறார்.

- Advertisement -

50 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து மக்களுக்கு சுவாரசியத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டதுதான் டி20 கிரிக்கெட். அதில் இன்னும் சுவாரசியத்தை கூட்ட ஐபிஎல் என்னும் தொடரை ஆரம்பித்து அதில் இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு வீரர்களையும் ஒரே அணியாக இணைத்து பெரிய வெற்றி கண்டது. இதற்கு முன்னர் வரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுக்குமே சாதகமாக இருந்த டி20 கிரிக்கெட் தற்போது பேட்டிங்க்கு மட்டுமே சாதகமாக இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் பிளேயர் என்னும் விதியின் மூலம் கூடுதல் பேட்ஸ்மேன் களமிறங்கி விளையாடுவதால் ஒரு அணியின் ஸ்கோரானது நினைத்ததை விட 30 முதல் 40 ரன்களுக்கு மேல் சென்று விடுகிறது. இதனால் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லாத சூழ்நிலையை உருவாகிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னால் வேகப்பந்து வீச்சாளர் ப்ரெட்லீ கூறும் பொழுது
“பொதுவாக இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை தவிர மற்ற வேகப்பந்து வீச்சாளர் யாரும் அதிகமாக யார்க்கர் பந்துகளை வீசுவதில்லை. நான் யார்க்கர் பந்துகள் அதிகம் வீசுவதை பார்க்க விரும்புகிறேன். ஆனால் அவர்கள் கடைசி கட்டத்தில் இது போன்ற பந்துகளை நம்பி வீச மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

கடந்த 17 வருடங்களாக ஐபிஎல் தொடரை எடுத்து பார்க்கும் பொழுது நீங்கள் யார்க்கர் பந்துகளை வீசும் பொழுது அந்தப் பந்தில் ஒரு ரன் அல்லது இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடியும். அல்லது சில நேரங்களில் ரன்கள் போகாதற்க்கு கூடவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பந்துகளை பந்துவீச்சாளர்கள் நம்பி அதிகம் வீசாமல் இருக்கின்றனர்.

இதையும் படிங்க:தோனி ஒரு ரியல் ஜென்டில்மேன்.. காலில் விழுந்த ரசிகரிடம் தோனி கூறிய நம்பிக்கை வார்த்தை.. அவரே அளித்திருக்கும் பேட்டி

நீங்கள் யார்க்கர் பந்துகளை வீசும் போது பேட்ஸ்மேன்கள் கூடுதலாக குனிந்து ஸ்கூப் ஷாட் தலைக்கு மேலே விளையாடி விடுகின்றனர். ஆனால் நீங்கள் அது மாதிரியான பந்துகளை வீசும் போது இரண்டு பீல்டர்களை உள்ளே வைத்து வீசினால் சரியாக இருக்கும்” என்று பிரட்லீ கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles