தோனியின் செல்லப் பெயரை ரொனால்டோவுக்கும் வைத்த பிஃபா.. இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் ‘தல’.. முழு விபரம்

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் இருந்த போதும் சரி, கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற போதும் சரி மக்களாலும் ரசிகர்களாலும் அதிகம் ஈர்க்கப்படும் ஒரு வீரர்.

- Advertisement -

புகழ்பெற்ற கால்பந்து அமைப்பான பிபா உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டோப்க்கு செல்லப் பெயர் வைத்துள்ள நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

- Advertisement -

கிரிக்கெட் உலகின் புகழ்பெற்ற வீரரான மகேந்திர சிங் தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐசிசி கிரிக்கெட்டில் மூன்று வடிவ கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. மேலும் களத்தில் இவரது அமைதியான அணுகுமுறையும், துல்லியமான முடிவுகளாலும் வெற்றிகளை தேடி தருவதில் இவரை விட கில்லாடி வீரர் யாருமில்லை.

- Advertisement -

களத்தில் இவரது அமைதியான குணத்திற்காகவே ரசிகர்கள் இவரைச் செல்லமாக “தல” என்று அழைத்து வருகின்றனர். ஐபிஎல் தொடரின் இடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகள் சில பிரச்சனைகளின் காரணமாக தடைபட்டது. இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு சென்னை அணி திரும்பவும் ஐபிஎல் களத்திற்கு நுழைவதை தெரிவிக்கும் விதமாக மகேந்திர சிங் தோனியே ‘தல’ என்று பொறிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியை அணிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அந்த அளவுக்கு ‘தல’ என்ற பெயர் தோனி ரசிகர்களுக்கு விருப்பமான பெயராகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் உலகின் புகழ்பெற்ற விளையாட்டான கால்பந்து விளையாட்டின் முடி சூடா மன்னனாக திகழும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து விளையாட்டை உலகத்தின் கடைக்கோடி மக்கள் மனதிலும் சென்றடைய முக்கிய காரணமாக இருப்பவர். கால்பந்தை பற்றி தெரியாத மக்கள் கூட இவரது பெயர் நிச்சயமாக எங்க ஒரு மூலையில் கேட்டிருப்பார்கள்.

- Advertisement -

அப்படிப்பட்ட ஒரு வீரருக்கு கால்பந்து அமைப்பான பிபா தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை ‘தல’ என்று அழைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அதாவது ரொனால்டோவையும், மகேந்திர சிங் தோனியையும் பெருமை சேர்க்கும் விதமாக பிபா தல என்ற பெயரை பதிவிட்டு இருக்கிறது. தலா என்பது தமிழ் வார்த்தை தல என்பது தலைவர் என்ற பொருளை குறிக்கும்.

இதையும் படிங்க:இவங்க 4 பேர் சொதப்புனா ஆப்கானிஸ்தான்கிட்டயே நம்ம தோக்க வேண்டியது தான்.. கூறுகிறார் இர்பான் பதான்

இதன்படி ரொனால்டோவை பிபா அமைப்பு நிறுவனம் ரொனால்டோவை தலைவர் என்று குறிப்பிட்டுள்ளது. இது தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மத்தியிலும், இந்திய ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles