2024 ஐபிஎல்லில் வீசப்பட்ட ஐந்து அதிவேகப் பந்துவீச்சு.. இந்த சிஎஸ்கே வீரருக்கு இடம்.. முதல் இடத்தில் இந்திய வீரர்

2024 ஐபிஎல் தொடர் தற்போது சுவாரசியமாக நடைபெற்று வருகிறது. என்னதான் ஒரு போட்டியில் பேட்டிங் மற்றும் சுழற் பந்துவீச்சு என்று இரண்டு பிரிவுகள் இருந்தாலும் வேகப்பந்து வீச்சு என்பது ஒரு தனி கலை.

- Advertisement -

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை என்பது உண்டு. அதற்கு எடுத்துக்காட்டு சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் 24.75 கோடிக்கு ஏலம் போனார். ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு வீரர் இவ்வளவு தொகைக்கு ஏலம் போனது இதுவே முதல் முறை. ஒரு போட்டியின் கடைசி கட்ட இறுதி ஓவர்களில் வேகப்பந்துவீச்சு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதுவும் வேகமாக வீசப்படும் பந்துகளுக்கு ஒரு மரியாதை எப்போதும் உண்டு. எனவே 2024 ஐபிஎல்லில் இதுவரை ஐந்து அதிவேக பந்துகளை வீசிய பந்துவீச்சாளர்கள் குறித்து பார்க்கலாம்.

- Advertisement -

5.மதீஷா பதிரானா

- Advertisement -

இலங்கை அணியைச் சேர்ந்த இளம் வேகபந்து வீச்சாளர் பதிரானா சென்னை அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக விளங்குகிறார். கடந்த சீசனில் சிறப்பாக பந்து வீசி சென்னை அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். சமீபத்தில் காயம் காரணமாக முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. இரண்டாவது போட்டியில் குஜராத் அணிக்காக பங்கேற்ற இவர் 150.9 கிலோமீட்டர் வேகத்தில் தனது அதிவேக பந்தினை வீசி இருக்கிறார்.

4.அல்ஜாரி ஜோசப்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் கடந்த சீசனில் குஜராத் அணிக்காக விளையாடினார். பின்னர் இவரை ஆர்சிபி அணி 11 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 151.2 கிலோமீட்டர் வேகத்தில் தனது அதிவேகத்தை காட்டியிருக்கிறார்.

3.ஜெரால்டு கோட்சி

தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜெரால்ட் கோட்சி தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக152.3 கிலோமீட்டர் வேகத்தில் வீசி தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார்.

2.நன்ரே பர்கர்

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் பர்கர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 153 கிலோ மீட்டர் வேகத்தில் தனது அதிவேக பந்தினை வீசி இருக்கிறார். தென்னாபிரிக்க அணி பந்துவீச்சாளர்கள் இந்த லிஸ்டில் இரண்டு பேர் இருக்கிறார்கள் என்று குறிப்பிடத்தக்கது.

1.மயங்க் யாதவ்

இந்திய அணியில் அறிமுகமாகாத 21 வயதான இளம் வேகபந்து வீச்சாளரான மயங்க் யாதவ் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 155.8 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தற்போது இதுவரை வீசப்பட்ட அதிவேக பந்து வீச்சாளர்களில் இவரே முதல் இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது பந்துவீச்சனை பல முன்னாள் வெளிநாட்டு வீரர்களும் பாராட்டி வருகிறார்கள்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles