சஞ்சு சாம்சன் 2014 இல் அறிமுகமான போதிலும், அவருக்கு குறைந்த வாய்ப்புகளே கிடைத்தன. ஆனால், அவர் வாய்ப்புகள் கிடைத்த பிறகு சிறப்பாக விளையாடி வருகிறார்.
குறிப்பாக, அவர் வங்காளதேசத்துக்கு எதிராக ஒரு சதத்தையும், பின்னர் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்த முதல் ஆட்டத்தில் மற்றொரு சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம், டி20I-யில் அடுத்தடுத்து சதங்களை பதிவு செய்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
சஞ்சு சாம்சனின் தந்தை, இப்போது மூத்த கிரிக்கெட் வீரர்களை குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் அவர் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவின் உதவியைப் பாராட்டி, அவர்கள் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டதற்காக நன்றி கூறினார்.
சஞ்சுவின் வாழ்க்கையை வீணடித்து விட்டார்கள்:
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் அவர் கூறியதாவது, “எனது மகனின் 10 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை வீணடித்தவர்களின் பட்டியலில் 3-4 பேர் இருக்கிறார்கள்… அவர்கள் யார் என்றால் தோனி ஜி, விராட் கோலி ஜி, ரோஹித் சர்மா ஜி மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஜி போன்றவர்கள்.
இந்த நான்கு பேர் என் மகனின் 10 வருட கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தார்கள், ஆனால் அவர்கள் என் மகன் சஞ்சு சாம்சனே எவ்வளவு அதிகமாக காயப்படுத்தினார்களோ, அதே வலிமையுடன் பிரச்சனையிலிருந்து அவன் மீண்டெழுந்தான். தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவின் உதவியைப் பாராட்டி, அவர்கள் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டதற்காக நன்றி “என்று கூறியிருந்தார்.
அந்த தமிழக வீரரும் உண்டு:
சஞ்சு சாம்சன், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அவர் சதம் அடித்தபோது, வர்ணனை செய்து கொண்டிருந்த ஸ்ரீகாந்த், சஞ்சு சாம்சன் சாதாரண அணிக்கு எதிராக சதம் அடித்து விட்டதாக கேலி செய்தார்.
இதனைக் குறித்து சஞ்சு சாம்சனின் தந்தை கூறியதாவது, “தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரரும் முன்னாள் இந்திய வீரருமான கிரிஸ் ஸ்ரீகாந்த் கூறிய வார்த்தைகளும் என் மகனை மிகவும் காயப்படுத்தியது. மக்கள் ஸ்ரீகாந்தை ஒரு சிறந்த வீரர் என்று சொல்கிறார்கள், ஆனால் நான் அதைப் பார்த்ததில்லை.
ஸ்ரீகாந்த் வங்காளதேசத்திற்கு எதிரான தொடரில் 26 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். என் மகன் சதம் அடித்துள்ளான். சதம் என்பது சதம் தான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. சஞ்சு சாம்சனின் விளையாட்டு திறன், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் திராவிட் போன்ற வீரர்கள் விளையாடும் தோற்றம் போன்றது. குறைந்தபட்சம், அதையாவது மதிக்கவேண்டும்! “என்று அந்த வீடியோவில் கூறி முடித்துள்ளார்.
அவரின் இந்த பேச்சானது ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

