கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி வந்தார். ஆனால் திடீரென்று இந்திய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டதற்கு சிஎஸ்கேதான் காரணம் என்று ரசிகர்கள் பல கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
அதாவது டி20 உலக கோப்பைக்குப் பிறகு கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அப்போது இந்திய அணியில் வருவதும் போவதுமாய் இருந்த கொண்டிருந்த சஞ்சு சாம்சன் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு ‘நீ 21 முறை டக் அவுட் ஆனாலும் உனக்கு நான் தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்குவேன்’ என்று தனக்கு கம்பீர் ஆதரவு அளித்தார். அந்த ஆதரவே நான் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் அடிப்பதற்கு காரணம் என்று அவரே பெருமையாக பேசினார்.
இந்த சூழ்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு மாறினார். அதற்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறாத சுப்மான் கில்லை திடீரென்று டி20 அணிக்கும் துணை கேப்டன் ஆக்கி சாம்சனுக்கு வழங்கிய தொடக்க இடத்தை கில்லுக்கு வழங்கியது. கடந்த டி20 தொடரில் மிடில் வரிசையில் விளையாடிய சாம்சன் அதற்குப் பிறகு முழுவதுமாக நீக்கப்பட்டதற்கு காரணம் சாம்சன் சிஎஸ்கே அணியில் இணைந்ததுதான் என்று ஒருதரப்பு ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். மேலும் கொல்கத்தா அனைத்து கேப்டனாக இருந்த கௌதம் கம்பீர், பல ஐபிஎல் போட்டிகளில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி கொல்கத்தா அணியை வீழ்த்தியதும் மற்றொரு காரணம் என்று சில ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

