இந்த பையன் ஆட சான்ஸ் தரணும்.. இல்லன்னா சிஎஸ்கே டீமை கலைச்சிடுங்க.. எங்கள சோதிக்காதீங்க – ரசிகர்கள் கோபம்

இன்று சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாபின் அணிக்கு எதிராக தனது இரண்டாவது போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் ஒரு இந்திய இளம் வீரருக்கு அறிமுக வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

ஐபிஎல் மினி ஏலத்தில் தலா 14.20 கோடி ரூபாய் கொடுத்து கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் என இரண்டு உள்நாட்டு வீரர்களை சிஎஸ்கே வாங்கியது. இதில் முதல் போட்டியில் கார்த்திக் சர்மா விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஷார்ட் விளையாட வைக்கப்பட்டு பிரசாந்த் வீர் வெளியில் உட்கார வைக்கப்பட்டார். இது சிஎஸ்கே அணி எடுத்த தவறான முடிவு என பல கிரிக்கெட் வல்லுனர்கள் விமர்சனம் செய்தார்கள்.

- Advertisement -

எனவே இன்று பிரசாந்து வீர் கட்டாயம் விளையாட வேண்டும், தொடர்ந்து தவறான முடிவுகள் எடுத்து எங்களை சோதிக்காதீர்கள் என சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles