இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாம் நாளுக்கான தொடரானது க்கெபர்ஹாவில் நவம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது.
இந்திய அணியில், ஹர்திக் பாண்டியா மட்டுமே ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து நிலைத்து நின்று ஆடி, 45 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இறுதியில், இந்திய அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த தோல்விக்குப் பிறகு சூரிய குமார் யாதவ்-வின் கேப்டன்சியை குறித்து ரசிகர்கள் மற்றும் நிபுணர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
சிறிய தவறு மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது:
தென்னாப்பிரிக்கா அணியானது 124 எடுத்தால் போதும் என்ற நிலையில் களம் இறங்கியது, ஆனால் அவர்கள் சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக தடுமாறிக் கொண்டிருந்தனர்.எனவே, இந்திய அணியானது தொடரில் 2-0 என்ற முன்னிலையைப் பெற்றுவிடும் என்று ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால், கேப்டன் சூரியகுமார் யாதவ், எதிர்பாராவிதமாக, 16 வது ஓவருக்குப் பிறகு சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யவில்லை. இடது கை சுழற் பந்துவீச்சாளரான அக்சர் படேலுக்கு 3 ஓவர்கள் மிச்சமிருந்தபோதிலும், கேப்டனின் இந்த முடிவானது ஆச்சரியமாய் இருந்தது.
சுழற்பந்து வீச்சாளர்கள் தான், சமீபத்திய தொடர்களில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கின்றனர். தென்னாப்பிரிக்காவின் பேட்டிங்கை பொறுத்த வரை, சுழற்பந்து வீச்சாளர்கள் 9 ஓவர்களில் 6 விக்கெட்களை வீழ்த்தி 40 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளனர்.
அதுவும், அக்சர் பட்டேல் தனது முதல் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். எனவே கேப்டன் சூரியகுமார் யாதவ், வேகப்பந்து வீச்சாளருக்கு பதிலாக அக்சர் பட்டேலே அணுகியிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி அணுகவில்லை.
ஏனென்றால், கடைசி நான்கு ஓவர்களில் 37 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ஜெரால்ட் கோட்சி வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் மற்றும் அவேஷ் கானுக்கு எதிராக தாக்குதலைத் தொடர்ந்து, போட்டியை 19 ஓவர்களிலேயே முடித்தனர். போட்டி முடிவில், வருண் சக்கரவர்த்தியும் 17 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறிய தவறு போட்டியின் இறுதியில் திருப்புமுனையாக அமைந்தது. எனவே, ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் அனைவரும் சூரியகுமாரின் கேப்டன்சியை விமர்சித்து வருகின்றனர்.

