விவாகரத்து என்பதெல்லாம் பொய்.. இது ஹர்திக் பாண்டியாவே போடும் நாடகம்.. கூறுகிறார் பிரபல நடிகர் ரோகித் குப்தா

இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான தோல்விகளை சந்தித்து வெறும் 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தோடு முடித்தது. இதற்குக் காரணம் அணிக்குள்ளே ஒற்றுமையின்மை, மற்றும் ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்சிதான் காரணம் என்று ஒரு கருத்து முன் வைக்கப்பட்டது.

- Advertisement -

இதை அடுத்து தற்போது ஹர்திக் பாண்டியாவின் சொந்த வாழ்க்கையிலும் பிரச்சனை என்றும் அவர் விரைவில் விவாகரத்து பெறப் போகிறார் என்றும் தகவல் வெளியான நிலையில், இது முற்றிலும் ஹர்திக் பாண்டியாவே ஏற்படுத்திய நாடகம் என்று நடிகரும் சமூக ஊடகப் பிரபலமான ரோகித் குப்தா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வலுவாக கருதப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி வலுவான வீரர்களைக் கொண்டிருந்தும் மோசமான தோல்விகளையே சந்தித்தது. ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து கேப்டன்சியை பறித்தது, சொந்த மாநில ரசிகர்களே ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக இருந்தது, மேலும் அணி வீரர்களுக்கிடையே ஒற்றுமையின்மை போன்ற பல்வேறு பிளவுகளுக்கு உட்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஆக்சன் நடைபெறுவதால் இதில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ஆக தக்க வைக்கப்படுவாரா? அல்லது ரோகித் சர்மாவை திரும்ப ஏலத்தில் எடுத்து கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணி நியமிக்குமா? என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றது. இது ஒரு புறம் இருக்க ஹர்திக் பாண்டியாவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் மூன்று மாத காலம் அவர்கள் இருவருக்கிடையே பேச்சுவார்த்தை இல்லை எனவும் தகவல் வெளிவந்தது.

மேலும் ஹர்திக் பாண்டியா விரைவில் விவாகரத்து பெற போவதாகவும் அப்படி விவாகரத்து பெற்றால் அவரது மனைவிக்கு 70% சொத்தில் பங்கு தர வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதை அடுத்து ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக பேசிய ரசிகர்களே தற்போது அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா தன் மீது ஏற்பட்ட கலங்கத்தை துடைக்கவே அவர் இதுபோன்ற நாடகத்தை நடத்துகிறார் என்று ரோஹித் குப்தா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நடிகரும் பிரபல சமூக வலைதள ஊடக நிபுணருமான ரோஹித் குப்தா இது குறித்து கூறும் பொழுது
“ஐபிஎல் 2024 சீசன் பாண்டியாவுக்கு நல்லபடியாக அமையவில்லை. இந்த சீசனில் அவர் கேப்டனாக செயல்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி மிக மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறியது. இதனால் ஏற்பட்ட அவமானத்தைத் தொடர்ந்து கலங்கமடைந்த தன்னுடைய இமேஜை சரி செய்து கொள்வதற்காக பாண்டியா தனது மனைவியை பயன்படுத்துகிறார்.

ஹர்திக் பாண்டியாவின் பிவிஆர் குழு வேண்டும் என்றே ஒரு கதை அமைத்து அதை தற்போது பரவ விட்டுள்ளது. தற்போது அவர்களது மௌனமே இது கதை தான் என்பதை காட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:ஐபிஎல்லை விடுங்க.. அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல.. டி20 உலக கோப்பைல பாருங்க.. உஸ்மான் கவாஜா நம்பிக்கை

ஹர்திக் பாண்டியா குறித்து தற்போது விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பாண்டியா லண்டனில் இருந்து தற்போது நேரடியாக அமெரிக்காவிற்கச் சென்று இந்திய அணியுடன் இணைந்துள்ளார். அவரது சொந்த வாழ்க்கை குறித்து அவர் பார்த்துக் கொள்ளட்டும். எதுவாக இருப்பினும் தற்போது இந்திய அணிக்காக டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது தற்போது ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles