தற்போது இலங்கை நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதோடு இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்து அசத்தியிருக்கிறது. டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராவதற்காக நடைபெற்ற இந்த தொடரில் இலங்கை அணி சொந்த மண்ணில் பரிதாபமாக தோல்வி அடைந்திருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சுக்கு அதிகம் சாதகம் காணப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணியின் தரப்பில் முன்னாள் வீரர் ஜோஸ் பட்லர் 21 பந்தில் 25 ரன், சாம் கரன் 48 பந்தில் 58 ரன்கள் எடுத்தார்கள். இலங்கை தரப்பில் துஷ்மந்திர சமீரா ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 112 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து எளிதாக வெற்றி பெறும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு விளையாடும் இங்கிலாந்து இளம் ஆல்ரவுண்டர் ஜேக்கப் பெத்தேல் 18வது ஓவருக்கு பந்துவீச்சுக்கு வந்தார். அந்த ஓவரில் அவர் வெல்லாலகே, சனகா, சமீரா என மூன்று விக்கெட்டை வீழ்த்தினார். இறுதி ஓவருக்கு வந்து மதிஷா தீக்சனா விக்கெட்டையும் வீழ்த்தினார். இலங்கை அணி பரிதாபமாக 116 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

