இந்திய அணியை வேட்டையாடுங்கள்.. 4-1 என்று வெல்ல பென் ஸ்டோக்ஸ் முயற்சிக்கணும்.. இங்கிலாந்து ஜாம்பவான்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இந்திய அணியில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, அஸ்வின், ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், சுப்மன் கில் தலைமையில் இந்திய இளம் வீரர்கள் களமிறங்க உள்ளனர். ஏற்கனவே ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்வியால் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

- Advertisement -

கிரேம் ஸ்வான் பேட்டி

அதேபோல் இங்கிலாந்து அணியும் வலிமையாக இருப்பதால், இந்திய அணியால் சவால் அளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியில் தரமான வீரர்கள் இருந்தாலும், இங்கிலாந்து மண்ணில் ஆடிய அனுபவம் இல்லாததால், ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். இந்த சூழலில் இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்று முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் பேசி இருக்கிறார்.

- Advertisement -

அவர் சொல்லும் போது, கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்து அணி 22 போட்டிகளில் விளையாடி 10 வெற்றியை மட்டுமே பெற்றது. 11 தோல்வி, ஒரு டிராவுடன் இருந்துள்ளது. இம்முறை இந்த்ய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இரு அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லை. அவர்கள் இருவருமே மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் வீரர்கள் தான்.

- Advertisement -

இந்தியாவை வீழ்த்துங்கள்

அவர்களின் இடத்தில் இளம் வீரர்கள் விளையாடுவார்கள். நிச்சயம் அவர்களுக்கு திறமை இருந்தாலும், அனுபவம் குறைவு. ஆனால் இங்கிலாந்து அணியில் சொந்த மண்ணில் எப்படி செயல்பட வேண்டும் என்று நன்றாக அறிந்த பவுலர்கள் இருக்கிறார்கள். அதனால் இங்கிலாந்து அணி கட்டாயம் இந்த தொடரை வெல்ல வேண்டும். சொல்லப் போனால், மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.

4-1 அல்லது 3-2 என்ற வெல்ல வேண்டும். அதற்கேற்ப இங்கிலாந்து அணி செயல்படும் என்று நம்புகிறேன். இந்த தொடரில் வென்ற பின், இதே நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியா மண்ணில் ஆஷஷ் தொடரை வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டுக்கு பின் ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு போட்டியில் கூட இங்கிலாந்து அணி வென்றதில்லை.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles